Wednesday, 19 February 2025

இன்றைய செய்திகள் (20.02.2025) - 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன - முதல்வர்

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இந்தியா – கத்தார் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாடுகளின் வணிகத்தை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2) பென்ஜல் புயல் பாதிப்புக்கு 498 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

3) அனைத்துச் சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

4) ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனைக்கு பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கலாம்.

5) பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பெண்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்கவும் சென்னையில் இளஞ்சிவப்பு முச்சக்கர வாகனத் திட்டம் (பிங்க் ஆட்டோ) செயல்படுத்தப்பட்டு உள்ளது.

6) தமிழகத்தில் இணைய வழி மோசடிகள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

7) தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றார். இவர் 2029 வரை பதவியில் இருப்பார்.

8) சர்சைக்குரிய கருத்துகளைச் சமூக வலைதளத்தில் பரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9) மகா கும்பமேளாவி இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

10) உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக விரைவில் ரஷ்ய அதிபருடன் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

11) இந்திய நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

12) இனிவரும் நாட்களில் தமிழகத்தில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13) தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 64,000/- ஐக் கடந்தது.

14) அதிக வரி விதிப்பதால் இந்தியாவிடம் அதிக பணம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

English News

1) 7 agreements signed between India and Qatar. Steps have been taken to double the trade between the two countries.

2) The Chief Minister has ordered a relief of Rs 498 crore for the damage caused by Cyclone Fenjal.

3) Deputy Chief Minister Udhayanidhi Stalin has assured that libraries will be set up in all prisons.

4) Teachers above the age of fifty can apply for a full medical check up by February 28.

5) The Pink Auto Scheme has been implemented in Chennai to ensure the safety of women and increase employment opportunities for women.

6) Online fraud has increased two and a half times in Tamil Nadu.

7) Gyanesh Kumar took office as the Chief Election Commissioner. He will hold office until 2029.

8) The Supreme Court has directed the Central Government to take appropriate steps to prevent the spread of controversial comments on social media.

9) 550 million people have taken holy dip in the Maha Kumbh Mela so far.

10) US President Donald Trump has said that he will soon talk to the Russian President regarding the ceasefire in Ukraine.

11) Unemployment in urban India has come down to 6 percent.

12) The Meteorological Department has said that Tamil Nadu will experience higher temperatures than normal in the coming days.

13) Gold prices have again crossed 64,000/- per sovereign.

14) US President Donald Trump has said that India has more money due to high taxes.

No comments:

Post a Comment