புதிய வருமான வரி அறிவிப்பு – 2025
– யார் யாருக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா?
மத்திய
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை 01.02.2025 (சனி)
அன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
சலுகைகளைக் காண்போமா?
புதிய
வருமான வரி முறையில் நிலைக்கழிவு ரூ. 75,000/- போக ரூ. 12 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு
வருமான வரி இல்லை.
ஒருவரது
ஆண்டு வருமானம் ரூ. 12,75,000/- எனில், அவர் இனி வருமான வரி கட்டத் தேவையில்லை.
அதாவது
இதை அப்படியே மாத வருமானத்தில் சொன்னால், ஒருவரது மாத வருமானம் ரூ. 1,06,250/- எனில் வருமான வரி கட்டத் தேவையில்லை.
இதனால்
அவருக்கு முன்பை விட தற்போதைய நிலையில் ரூ. 80 ஆயிரம் வரி மிச்சமாகிறது.
அதுவே
அவரது ஆண்டு வருமானம் ரூ. 18 லட்சமாக இருந்தால், முன்பை விட ரூ. 70 ஆயிரம் வரி மிச்சமாகும்.
அதுவே,
அவரது ஆண்டு வருமானம் ரூ. 25 லட்சமாக இருந்தால், முன்பை விட ரூ. 1,10,000/- மிச்சமாகும்.
ஒருவேளை
ஒருவரது ஆண்டு வருமானம் நிலைக்கழிவெல்லாம் போக, ரூ. 12,01,000/- எனில் அவர் ரூ.
60,150/- ஐ வருமான வரியாகக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் அவருக்கு வழங்கப்படும் வரி
நிவாரணத்தால் ரூ. 8650/- ஐ வரியாகக் கட்டினால் போதும். இப்படி நிலைக்கழிவு போக உள்ள
ஆண்டு வருமானத்துக்கு வழங்கப்படும் வரி நிவாரணம் குறித்த விவரம் வருமாறு,
ரூ.
12,00,001/- லிருந்து ரூ. 12,10,000/- வரையுள்ள ஆண்டு வருமானத்துக்கு வரும் வரிக்கு
வரி நிவாரணமாக ரூ. 51,500/- ஐக் கழித்துக் கொள்ளலாம்.
ரூ.
12,10,001/- லிருந்து ரூ. 12,50,000/- வரையுள்ள ஆண்டு வருமானத்துக்கு வரும் வரிக்கு
வரி நிவாரணமாக ரூ. 17,500/- ஐக் கழித்துக் கொள்ளலாம்.
ரூ.
12,50,001/- லிருந்து ரூ. 12,70,000/- வரையுள்ள ஆண்டு வருமானத்துக்கு வரும் வரிக்கு
வரி நிவாரணமாக ரூ. 500/- ஐக் கழித்துக் கொள்ளலாம்.
ரூ.
12,70,000/- மேற்பட்ட ஆண்டு வருமானத்துக்கு எவ்வித வரி நிவாரணமும் கிடையாது.
இதைக்
கீழுள்ள அட்டவணையில் காணலாம்.
நிலைக்கழிவு போக ஆண்டு வருமானம் |
வரி நிவாரணம் |
ரூ.
12,00,001/- முதல் ரூ. 12,10,000/- வரை |
ரூ.
51,500/- |
ரூ.
12,10,001/- முதல் ரூ. 12,50,000/- வரை |
ரூ.
17,500/- |
ரூ.
12,50,001/- முதல் ரூ. 12,70,000/- வரை |
ரூ.
500/- |
ரூ.
12,70,000/- க்கு மேல் |
இல்லை |
2025
ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளபடி புதிய வருமான வரி முறையில் ஆண்டு
வருமானம் ரூ. 12 லட்சத்துக்கு மேல் அதிகமாகும் போது,
ரூ.
4 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி இல்லை.
ரூ.
4,00,001/- முதல் ரூ. 8 லட்சம் வரை 5 சதவீத வரியும்,
ரூ.
8,00,001/- முதல் ரூ. 12 லட்சம் வரை 10 சதவீத வரியும்,
ரூ.
12,00,001/- முதல் ரூ. 16 லட்சம் வரை 15 சதவீத வரியும்,
ரூ.
16,00,001/- முதல் ரூ. 20 லட்சம் வரை 20 சதவீத வரியும்,
ரூ.
20,00,001/- முதல் ரூ. 24 லட்சம் வரை 25 சதவீத வரியும்,
ரூ.
24 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதைக்
கீழுள்ள அட்டவணையில் காணலாம்.
ஆண்டு வருமானம் |
வரி விகிதம் |
ரூ.
4 லட்சம் வரை |
இல்லை |
ரூ.
4,00,001/- முதல் 8 லட்சம் வரை |
5
சதவீதம் |
ரூ.
8,00,001/- முதல் 12 லட்சம் வரை |
10
சதவீதம் |
ரூ.
12,00,001/- முதல் 16 லட்சம் வரை |
15
சதவீதம் |
ரூ.
16,00,001/- முதல் 20 லட்சம் வரை |
20
சதவீதம் |
ரூ.
20,00,001/- முதல் 24 லட்சம் வரை |
25
சதவீதம் |
ரூ.
24 லட்சத்துக்கு மேல் |
30
சதவீதம் |
No comments:
Post a Comment