Wednesday, 5 February 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 06.02.2025 (வியாழன்)

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 06.02.2025 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படப் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. நாளை பள்ளி அளவிலும், பிப்ரவரி 13 இல் வட்டார அளவிலும், பிப்ரவரி 20 இல் மாவட்ட அளவிலும் நடைபெறுகின்றன.

2) தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

3) தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

4) நுண் நெகிழிகள் மூளைக்குள் ஊடுருவி மறதிக்கு வழிவகுப்பதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

5) தமிழகம் முழுவதும் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

6) ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் மற்றும் டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

7) அனைத்துச் சுங்கச் சாவடிகளிலும் கழிவறை வசதிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

8) ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு மூலமாக 8.5 கோடி பேருக்கு மருத்துவ சிகிக்சைகள் செய்யப்பட்டுள்ளன.

9) விருது வழங்குவதற்கு முன் விருதாளர்களிடம் ஒப்புதலைப் பெற நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது.

10) அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 15 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்துள்ளது.

11) தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

English News

1) Children's film competitions in government schools will start from tomorrow. They will be held at the school level tomorrow, at the district level on February 13 and at the district level on February 20.

2) The Chief Minister has announced that environmental forums will be set up in all schools in Tamil Nadu.

3) The Tamil Nadu government has set up a committee to examine pension schemes for Tamil Nadu government employees.

4) The Tamil Nadu Health Department has announced that microplastics penetrate the brain and lead to amnesia.

5) The Tamil Nadu Health Department has decided to conduct cancer tests on 5.45 crore people across Tamil Nadu.

6) The by-elections for the Erode East constituency and the Delhi Assembly elections were held yesterday.

7) The Central Government has announced that toilet facilities will be set up at all toll booths.

8) 8.5 crore people have been treated through Ayushman Bharat Health Insurance.

9) The parliamentary committee has advised to seek approval from the awardees before presenting the award.

10) China has imposed an additional tax of up to 15 percent on American goods.

11) The Meteorological Department has announced that the temperature will increase in Tamil Nadu today and tomorrow.

No comments:

Post a Comment