Wednesday, 29 April 2020

கொரோனாவுக்கு எதிரான இரண்டு ஆப்புகள்

கொரோனாவுக்கு எதிரான இரண்டு ஆப்புகள்

கொரோனாவுக்கு எதிரான முயற்சியில் இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் இரண்டு முன்னெடுப்புகளை APP எனப்படும் செயலிகள் மூலமாக மேற்கொண்டுள்ளன. இதன்படி தங்களிடம் உள்ள Adroid Mobile இன் Play Store இல் சென்று,
 Arogya setu app  எனவும் IVRS COVID 19 எனவும் அதன் தேடுபொறியில் தட்டச்சு செய்து இவ்விரு செயலிகளையும் பதிவிறக்கம் (download) செய்து பயன்படுத்தலாம்
அல்லது கீழ்காணும் அதற்கான இணைப்புகளில் சென்றும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
App Link
Aarogya setu - app
 Covid-19 -app link
இந்த APP எனும் செயலி மூலம் தங்கள் அருகில் இருப்பவர்கள் யாரேனும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் எளிதில் கண்டறிய இயலும்.
இதன் மூலம் வைரஸ் தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.
மேலும் இச்செயலிகள் மூலம் கொரோனா பாதிப்புக் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை உடனுக்குடன் அதிகாரப்பூர்வமாகப் பெற இயலும்.
இச்செயலிகளைப் பயன்படுத்துவோம்! மற்றவர்களும் பயன்படுத்த துணை செய்யும் வகையில் பகிர்வோம்!
******


Friday, 24 April 2020

உரைமருந்துக்கான பொருட்கள் என்னவென்று தெரியுமா?

உரைமருந்துக்கான பொருட்கள்

            தமிழகத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பச்சிளங் குழந்தையைக் குளிப்பாட்டியதும் உரைமருந்து கொடுக்கும் வழக்கம் உண்டு. இம்மருந்தை ஒரு பாலாடையில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பர். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பாலாடையைப் பயன்படுத்துவது வழக்கம். இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் குழந்தைக்கு வாங்கிய பாலாடை இருந்தாலும், இரண்டாவது குழந்தைக்கென தனியே ஒரு பாலாடையை வாங்கிப் பயன்படுத்துவதே பழக்கம்.
            இந்த உரைமருந்தால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியும், சீரண சக்தியும் அதிகமாகி குழந்தை நோய் நொடிக்கு உள்ளாகாமல் இருக்கும். குழந்தைப் பருவத்தோடு மட்டுமல்லாது குழந்தை வளர்ந்து பெரியவராக ஆன பின்னும் இம்மருந்தின் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று இம்மருந்தை அரைத்துக் கொடுக்கும் பாட்டிமார்கள் சொல்வதுண்டு. இப்பிடி அரைத்து கொடுக்கும் இம்மருந்தையே உரைமருந்து என்பர். அதாவது அரைத்து என்பதை உரைத்து என்பதாகக் கொண்டு உரைத்துக் கொடுக்கும் மருந்தாக ஆவதால் உரைமருந்து என்று.
            இம்மருந்துக்கு கூடவோ, குறைவோ ஒவ்வொரு பகுதிக்கும் கீழே கொடுக்கப்பட்டள்ள பட்டியலில் உள்ள மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துவர். அம்மூலிகை மருந்துகளை குழியடி அம்மியில் உரைத்து எடுத்து, வெந்நீரில் கரைத்து, பாலாடையில் ஊற்றிக் கொடுப்பது மரபு. அப்படிப்பட்ட இம்மருந்து தமிழர்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு நீண்ட காலமாக வலு சேர்த்திருக்கிறது.
            தடுப்பூசிகளின் காலத்திற்குப் பின்பு மறைந்த உரைமருந்து முறையை மீண்டும் மீட்கொணர்வதால் தமிழ் மருத்துவம் செழுமையடைவதோடு, தமிழகத்தின் நோய் எதிர்ப்பாற்றலும் மேம்படும். அதை மீட்கொணர்வதற்கு உரைமருந்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அம்மருந்துகளின் பொதுவான பட்டியல் இதோ,
1.
ஓமம்
2.
சிற்றரத்தை
3.
சுக்கு
4.
பூண்டு
5.
பொரித்த பெருங்காயம்
6.
சாதிக்காய்
7.
மாசிக்காய்
8.
கருக்கிய வசம்பு
9.
வெற்றிலை
10.
குப்பைமேனி
11.
நுணாக் கொழுந்து
12.
கண்டங்கத்திரி இலை
13.
தூதுவளை
14.
ஆடாதோடை இலை
15.
நொச்சிக் கொழுந்து
16.
வேப்பிலைக் கொழுந்து
17.
துளசி
18.
ஓமவள்ளி
19.
ஏலப்பூ
20.
தும்பைப்பூ
*****


Wednesday, 22 April 2020

பழ விடுகதைகள் - 3

பழ விடுகதைகள் - 3

வ.எண்
விடுகதை
விடை
1.
மரத்துக்கு மேலே பழமாம். பழத்துக்கு மேலே மரமாம். அது என்ன?
அன்னாசிப்பழம்
2.
பார்த்தால் கருப்பழகி. வாயில் போட்டால் இனிப்பழகி. அது என்ன?
நாவற்பழம்
3.
ஓட்டைப் பிரித்தால் ஒளிந்திருக்கும் பதினோரு செல்லப்பிள்ளை. அது என்ன?
ஆரஞ்சு
4.
சிவப்பு எருதைப் பிடிக்கப் போனால், கொக்கி எருது குத்த வருகிறது. அது என்ன?
இலந்தைப் பழம்
5.
ஒற்றைச் சடையில் நூறு குண்டுமணி. அது என்ன?
திராட்சை


Tuesday, 21 April 2020

சைவ ஆகமங்கள்

சைவ ஆகமங்கள்

சைவ சிந்தாந்தத்தின் பிரமாண நூல்களாகக் கருதப்படுபவை வேதங்களும், ஆகமங்களும் ஆகும். இதில் வேதம் பொதுப் பிரமாணமாகவும், ஆகமம் சிறப்புப் பிரமாணமாகவும் கருதப்படுகிறது.
சைவ சித்தாந்த பிரமாண நூல்கள்
பொதுப் பிரமாணம்
சிறப்புப் பிரமாணம்
வேதங்கள்
ஆகமங்கள்
சிறப்பு பிரமாணமாகக் கருதப்படும் சைவ ஆகமங்கள் 28 ஆகும். இச்சைவ ஆகமங்கள் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை,
1. சிவபேத ஆகமங்கள்
2. ருத்ரபேத ஆகமங்கள்
காமிகம் முதல் வாதுளம் வரையான இருபத்தெட்டு சிவாகமங்களில், காமிகம் முதல் சுப்பிரபேதம் வரையான பத்தும் சிவபேத ஆகமங்களாகும்.
விஜயம் முதல் வாதுளம் வரையான பதினெட்டும் உருத்திரபேத ஆகமங்களாகும்.
இவற்றுள் 10 ஆகமங்கள் இறைவரால் நேரடியாகப் பாடப்பட்டதாகவும், 18 இறைவழி ஞானியரால் பாடப்பட்டதாகவும் கொள்ளப்படுகிறது.
சைவ ஆகமங்கள் - 28
சிவபேத ஆகமங்கள் - 10
ருத்ரபேத ஆகமங்கள் - 18
காமிகம் முதல் சுப்பிரபேதம் வரை
விஜயம் முதல் வாதுளம் வரை

சிவபேத ஆகமங்கள் மற்றும் ருத்ர பேத ஆகமங்களின் பட்டியில் வருமாறு
சிவபேத ஆகமங்கள் - 10
ருத்திரபேத ஆகமங்கள் - 18
1. காமிக ஆகமம்
1. விஜய ஆகமம்
2. யோகஜ ஆகமம்
2. நிஸ்வாச ஆகமம்
3. சிந்திய ஆகமம்
3. சுயம்பூத ஆகமம்
4. காரண ஆகமம்
4. ஆக்னேய ஆகமம்
5. அஜித ஆகமம்
5. வீர ஆகமம்
6. தீப்த ஆகமம்
6. இரௌரவ ஆகமம்
7. சூட்சும ஆகமம்
7. மகுட ஆகமம்
8. சகஸ்ர ஆகமம்
8. விமல ஆகமம்
9. அஞ்சுமான் ஆகமம்
9. சந்திரஞான ஆகமம்
10. சுப்ரபேத ஆகமம்
10. முகவிம்ப ஆகமம்

11. புரோற்கீத ஆகமம்

12. லலித ஆகமம்

13. சித்த ஆகமம்

14. சந்தான ஆகமம்

15. சர்வோத்த ஆகமம்

16. பரமேசுவர ஆகமம்

17. கிரண ஆகமம்

18. வாதுள ஆகமம்
*****

Monday, 20 April 2020

காய்கறி விடுகதைகள் - 3

காய்கறி விடுகதைகள் - 3

வ.எண்
விடுகதை
விடை
1.
உச்சாணி மரத்திலே உலக்கை கட்டித் தொங்குகிறது. அது என்ன?
முருங்கைக் காய்
2.
பூப் பூவா பூத்திருப்பாள் மகராசி. தலையில் வைக்க முடியுமா? அது என்ன நீ யோசி!
காலிஃப்ளவர்
3.
பச்சைப் பெட்டியில் முத்துச்சரம். அது என்ன?
வெண்டைக்காய்
4.
தோலை உரித்தாலும் அழ மாட்டான். உரித்தவனை அழ வைக்காமல் ஓய மாட்டான். அவன் யார்?
வெங்காயம்
5.
பெட்டியைத் திறந்தால் மூட முடியாது. அது என்ன?
தேங்காய்