உரைமருந்துக்கான
பொருட்கள்
தமிழகத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பச்சிளங் குழந்தையைக்
குளிப்பாட்டியதும் உரைமருந்து கொடுக்கும் வழக்கம் உண்டு. இம்மருந்தை ஒரு பாலாடையில்
ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பர். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பாலாடையைப் பயன்படுத்துவது
வழக்கம். இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் குழந்தைக்கு வாங்கிய பாலாடை இருந்தாலும்,
இரண்டாவது குழந்தைக்கென தனியே ஒரு பாலாடையை வாங்கிப் பயன்படுத்துவதே பழக்கம்.
இந்த உரைமருந்தால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியும்,
சீரண சக்தியும் அதிகமாகி குழந்தை நோய் நொடிக்கு உள்ளாகாமல் இருக்கும். குழந்தைப்
பருவத்தோடு மட்டுமல்லாது குழந்தை வளர்ந்து பெரியவராக ஆன பின்னும் இம்மருந்தின் நோய்
எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று இம்மருந்தை அரைத்துக் கொடுக்கும் பாட்டிமார்கள்
சொல்வதுண்டு. இப்பிடி அரைத்து கொடுக்கும் இம்மருந்தையே உரைமருந்து என்பர். அதாவது
அரைத்து என்பதை உரைத்து என்பதாகக் கொண்டு உரைத்துக் கொடுக்கும் மருந்தாக ஆவதால் உரைமருந்து
என்று.
இம்மருந்துக்கு கூடவோ, குறைவோ ஒவ்வொரு பகுதிக்கும் கீழே கொடுக்கப்பட்டள்ள
பட்டியலில் உள்ள மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துவர். அம்மூலிகை மருந்துகளை குழியடி
அம்மியில் உரைத்து எடுத்து, வெந்நீரில் கரைத்து, பாலாடையில் ஊற்றிக் கொடுப்பது மரபு.
அப்படிப்பட்ட இம்மருந்து தமிழர்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு நீண்ட காலமாக வலு
சேர்த்திருக்கிறது.
தடுப்பூசிகளின் காலத்திற்குப் பின்பு மறைந்த உரைமருந்து முறையை
மீண்டும் மீட்கொணர்வதால் தமிழ் மருத்துவம் செழுமையடைவதோடு, தமிழகத்தின் நோய் எதிர்ப்பாற்றலும்
மேம்படும். அதை மீட்கொணர்வதற்கு உரைமருந்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளைத் தெரிந்து
கொள்வது அவசியமாகிறது. அம்மருந்துகளின் பொதுவான பட்டியல் இதோ,
1.
|
ஓமம்
|
2.
|
சிற்றரத்தை
|
3.
|
சுக்கு
|
4.
|
பூண்டு
|
5.
|
பொரித்த பெருங்காயம்
|
6.
|
சாதிக்காய்
|
7.
|
மாசிக்காய்
|
8.
|
கருக்கிய வசம்பு
|
9.
|
வெற்றிலை
|
10.
|
குப்பைமேனி
|
11.
|
நுணாக் கொழுந்து
|
12.
|
கண்டங்கத்திரி இலை
|
13.
|
தூதுவளை
|
14.
|
ஆடாதோடை இலை
|
15.
|
நொச்சிக் கொழுந்து
|
16.
|
வேப்பிலைக் கொழுந்து
|
17.
|
துளசி
|
18.
|
ஓமவள்ளி
|
19.
|
ஏலப்பூ
|
20.
|
தும்பைப்பூ
|
*****
No comments:
Post a Comment