Tuesday 14 April 2020

பொதிகை தொலைக்காட்சியில் இன்றிலிருந்து பத்தாம் வகுப்புப் பாடங்கள்

பொதிகை தொலைக்காட்சியில் இன்றிலிருந்து 
பத்தாம் வகுப்புப் பாடங்கள்

இன்று 15. 04. 2020 (புதன்) முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.
இப்பாடங்கள் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை இன்றிலிருந்து ஒளிபரப்பப்படுகிறது.
  • கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக மார்ச் 27-ஆம் தேதி  தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், இதன் பின்னா் பொதுத் தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டியது அவசியமாகிறது.
  • ஒவ்வொரு தோ்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
  • எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தோ்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள இது ஒரு நல்வாய்ப்பாகும்.
  • ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயார் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில் மேலும் மாணவா்களை, பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் இன்று புதன்கிழமை முதல்  காலை 10 மணி முதல் 11 மணி வரை  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இத்தகவலை பத்தாம் வகுப்பு மாணவர்கள் பயன் பெறும் வகையில் பகிரவும்.

No comments:

Post a Comment