Saturday 18 April 2020

ஏப்ரல் 20 முதல் தொடங்குகின்றன பத்திரப் பதிவுகள்!

ஏப்ரல் 20 முதல் தொடங்குகின்றன பத்திரப் பதிவுகள்!

ஏப்ரல் 20, 2020 (திங்கள்) முதல் தொடங்குகின்றன பத்திரப் பதிவுகள். இது குறித்து பத்திரப் பதிவுத் துறையானது சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் ஒரு நாளுக்கு 24 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, அந்த டோக்கன்களுக்கு மட்டுமே பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படும்.
சார் பதிவாளா் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை கைகளைக் கழுவிய பிறகே அலுவலகத்துக்குள் நுழையுமாறு அறிவுறுத்தும் தகவலை மக்களின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும்.
ஒரு மேஜையில் கிருமிநாசினியை வைத்து, உள்ளே வரும் பொதுமக்கள் கைகளில் கிருமிநாசினியைத் தடவிய பிறகே, அலுவலகத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
பத்திரப் பதிவின்போது, பொதுமக்களிடம் இருந்து கைரேகை பெற ஒன்று அல்லது இரண்டு தனியான விரல் ரேகை இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த இயந்திரம், அலுவலருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தேவையான சமூக இடைவெளி விட்டு, பின் தனியான ஒரு மேஜையில் வைக்க வேண்டும்.
விரல் ரேகை இயந்திரத்தின் அருகில் கிருமிநாசினி வைத்து ஒவ்வொரு முறை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பிறகும் இயந்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்துப் பணியாளா்களும் முகக் கவசம், கையுறை அணிந்து பதிவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சார் பதிவாளா் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து அலுவலகத்துக்குள் நுழைய அறிவுறுத்த வேண்டும்.
ஆவணப் பதிவின் போது பொதுமக்கள் தங்களது முகக் கவசத்தை கழற்றிக் கொள்ளலாம்.

அலுவலகத்துக்கு வெளியே பொதுமக்கள் தேவையின்றி கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உள்ளே நுழையும் அனைத்து பொதுமக்களின் பெயா், தொலைபேசி எண், உள்ளே மற்றும் வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை தேதி வாரியாக குறிப்பிட்டு தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும்.
அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஆவணப் பதிவை தாக்கல் செய்பவரை முதலில் அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். விவரங்களைச் சரிபார்த்த பிறகு, ஆவணத்தில் சம்பந்தப்பட்ட பிற நபா்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஆவணப் பதிவு நிறைவடைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் வெளியேறிய பிறகே, அடுத்த ஆவணப் பதிவை சார்பதிவாளா் மேற்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஆவணப் பதிவு கிடையாது
ஆவணப் பதிவின்போது சம்பந்தப்பட்ட நபா் அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதியைச் சோ்ந்தவராக இருந்தால், அவரது ஆவணத்தைப் பதிவுக்கு பரிசீலிக்கத் தேவையில்லை.
ஆவணப் பதிவுக்கு முன்பாக, கணினி வழியே அந்த விவரத்தை சார் பதிவாளா் அறிந்து பதிவினை நிராகரிக்கலாம்.
கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஏதாவது ஓா் இடத்தில் சார் பதிவாளா் அலுவலகம் அமைந்திருந்தால் அதனை அருகிலுள்ள இடத்துக்கு தாற்காலிமாக இடமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு சார் பதிவாளா் அலுவலகத்திலும் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். அதாவது, காலை 10 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நான்கு டோக்கன்கள் அளிக்கப்படும். அதில், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளையாகும்.
பொது மக்கள் தாங்கள் பதிவு செய்த கால இடைவெளியில் வரவில்லை என்றால், அடுத்த இடைவெளியின் கடைசி டோக்கனாக பதிவை மேற்கொள்ளலாம். அடுத்த இடைவெளியிலும் வரவில்லை எனில், அந்த நாளில் ஆவணப் பதிவு செய்ய வேண்டியதில்லை என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment