Saturday, 11 April 2020

ஒரே நாளில் 2000 உயிரிழப்புகள்

ஒரே நாளில் 2000 உயிரிழப்புகள்

நேற்றைய கடந்த 24 மணி நேரத்தில் 2,108 கொரோனா உயிரிழப்புகளுடன் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளைப் பதிவு செய்த முதல் நாடு அமெரிக்கா என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இருபதாயிரத்தைக் கடந்து உள்ளது. இந்த எண்ணிகையானது இது வரை கொரோனா உயிரிழப்புகளில் மிக அதிகமாக இருந்த இத்தாலியின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 19,500 ஐ கடந்துள்ளது.
நேற்றைய 24 மணி நேரக் கணக்குப்படி, அமெரிக்காவில் முப்பத்தைந்தாயிரத்துக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது.
தற்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு அளவிலான இறப்புகள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும்.



No comments:

Post a Comment