Thursday, 9 April 2020

வாட்ஸ் ஆப்பிற்கே வதந்தியா?

வாட்ஸ் ஆப்பிற்கே வதந்தியா?

வாட்ஸ் ஆப்பில் வதந்தியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொதுவாகக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் பற்றியே வாட்ஸ் ஆப்பில் வதந்திகள் பரப்பப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி,
சமீபத்தில் WhatsApp செயலி குறித்த ஒரு ஃபார்வர்டு மெஸேஜ், பரவலான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மெஸேஜில் வரும் தகவல்படி அரசு, ஒருவருக்கு வரும் அனைத்து வாட்ஸ் ஆப் மெஸேஜ்களையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தவறான மெஸேஜ் அனுப்பப்பட்டாலோ பகிர்ந்தாலோ அது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா என்பதும் தெரிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்படுகிறது. 
வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் பெரும்பான்மையானோர் தாங்கள் அனுப்பும் அல்லது பெறும் மெஸேஜ்களுக்குப் பக்கத்தில் வரும் ‘டிக்' பற்றி அறிந்திருப்பார்கள். கிரே வண்ணத்தில் டிக் இருந்தால் மெஸேஜ் அனுப்பப்பட்டது என்று பொருள், கிரே வண்ணத்தில் இரண்டு டிக்ஸ் இருந்தால் மெஸேஜ் டெலிவரி செய்யப்பட்டது என்று அர்த்தம். நீல வண்ணத்தில் இரண்டு டிக்ஸ் இருந்தால் மெஸேஜ் படிக்கப்பட்டுவிட்டது என்று பொருள். 
ஆனால், வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் ஒரு ஃபார்வர்டு மெஸேஜில், 3 நீல டிக்ஸ் இருந்தால் அரசு ஒரு குறிப்பிட்ட மெஸேஜைப் பார்த்துவிட்டது என்று பொருள் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல 2 நீல டிக்ஸ் மற்றும் ஒரு சிவப்பு டிக் இருந்தால், அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், 1 நீலம் மற்றும் 2 சிவப்பு டிக்ஸ் இருந்தால் உங்கள் மெஸேஜை அரசு சோதனை செய்து வருகிறது என்று பொருளாம். கடைசியாக, 3 சிவப்பு டிக்ஸ் இருந்தால், அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டது என்று அர்த்தமாம். அதற்கான சம்மன் விரைவில் உங்களைத் தேடி வரும் என்றும் அந்த ஃபார்வர்டு மெஸேஜில் சொல்லப்படுகிறது. 
அந்த வதந்தியான பார்வேர்டு மெசேஜ் என்பது இதுதான் :
WhatsApp info
1. = Message Sent
2. √√ = Message Delivered
3. 2 Blue √√ =Message Read.
4. 3 Blue √√√ = Govt has taken a Note.
5. 2 Blue 1 Red √√√ = Govt can take action against u.
6. 1 Blue 2 Red √√√ = Govt is screening ur data.
7. 3 Red √√√ =  Govt has initiated action & u'll receive summons from court.

Be a responsible citizen & share with your friends/Family.
இது முற்றிலும் தவறான போலியான ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் ஆகும்.
இது குறித்து, மத்திய அரசே விளக்கம் கொடுத்து ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. அதனைக் கீழே உள்ள படத்தில் காணலாம். 

இது போன்ற வதந்திகளின் காரணமாக போலி தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம், அதிகமாக ஃபார்வர்டு செய்யப்பட்ட ஒரு மெஸேஜை ஒரு சமயத்தில் ஒரேயொருவருக்கு மட்டும்தான் அனுப்பும் வகையில் மாற்றம் செய்துள்ளது. இவ்வகையில் வதந்திகள் பரப்பப்படுவதற்கு வாட்ஸ் ஆப் தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.



No comments:

Post a Comment