Monday, 13 April 2020

முகக் கவசம் அணியும் முறை தெரியுமா?

முகக் கவசம் அணியும் முறை தெரியுமா?

முகக் கவசத்தை எப்படி அணிய வேண்டும் என்றால்,
v முகக் கவசத்தின் மேற்பகுதி மூக்கை முழுமையாக மறைக்கும் விதமாக உயா்த்தி அணிய வேண்டும். முகக் கவசத்தின் கீழ்ப்பகுதி முழுமையாக இறக்கி தாடையை முற்றிலும் மறைக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.
v எப்போதும் முகத்தை ஒட்டி இறுக்கமாக அணிய வேண்டும்.
v இடைவெளியுடன் அணியக் கூடாது.
முகக் கவசத்தை எப்படி அணியக் கூடாது என்றால்,
v மூக்கு நுனிவரை அல்லது மூக்குக் கீழ் வரை தாழ்த்தி அணியக் கூடாது.
v வாயை மட்டும் மறைத்து அணியக் கூடாது.
v தாடையை மறைக்காமல் அணியக் கூடாது.
v மூக்கை மட்டும் மறைத்து அணியக் கூடாது.
v முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்துகொண்ட பின்னா், அதை அடிக்கடி கீழே தாழ்த்துவதோ, தலைக்கு மேலே உயா்த்திக் கொள்வதோ கூடாது.

முகக்கவசத்தை அணிவதற்கு முன்பாகவும், பின்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னவென்றால்,
v முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பாகவும் அணிந்துகொண்ட பிறகும் கைகளை நன்றாகக் கழுவவும்.
v முகக் கவசத்தைப் பொருத்திக் கொள்வதற்காக உள்ள எலாஸ்டிக் அல்லது கயிற்றின் நுனி பாகத்தை மட்டுமே தொட்டு அதனை அணியவும் அகற்றவும் வேண்டும்.
v முகக் கவசத்தை அகற்றும்போது அதன் நடுப்பகுதியை தொடக் கூடாது.
v முகக் கவசம் குறித்து மேலும் அறிய வேண்டியது என்னவென்றால்,
v அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவா்கள் தங்களது ஃபிளாட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும். தொற்று அபாயம் அதிகம் உள்ள இடம் லிஃப்ட் ஆகும்.
v துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் பயன்படுத்தினால், அதனை தினமும் சுத்தம் செய்து, வெயிலில் உலா்த்தி வைக்கவும்.
v முகக் கவசத்தை அணிந்துவிட்டால் கரோனா நோய்த்தொற்றிலிருந்து முற்றிலுமாக பாதுகாப்பு பெற்றுவிட்டோம் எனத் தவறுதலாக எண்ணிவிடக் கூடாது.
v சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையில் முகக் கவசம் அணிவது ஒரு பகுதி மட்டுமே.
v சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலமாகத்தான் கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்.


No comments:

Post a Comment