பழ விடுகதைகள் - 2
வ.எண்
|
விடுகதை
|
விடை
|
1.
|
ஓகோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே
ஓட்டுச் சட்டியிலே களிமண். அது என்ன?
|
விளாம் பழம்
|
2.
|
தகப்பன் பச்சையாம். மகள் சிவப்பாம்.
மகன் கருப்பாம். அது என்ன?
|
தர்பூசணிப் பழம்
|
3.
|
உமி போல் பூ பூக்கும். சிமிழ்
போல் காய் காய்க்கும். தண்ணீர் குடித்தால் இனிக்கும்.
அது என்ன?
|
நெல்லிக் கனி
|
4.
|
காய் விட்டால் சேர்ந்திருப்பான்.
பழம் விட்டால் பிரிந்திடுவான். அவன் யார்?
|
புளியம்பழம்
|
5.
|
பூத்தால் மஞ்சள், காய்த்தால்
சிவப்பு, பழுத்தால் கருப்பு. அது என்ன?
|
பேரீச்சம் பழம்
|
No comments:
Post a Comment