Friday, 10 April 2020

கபசுரக் குடிநீர் – பகுதிப் பொருட்கள் ஒரு பகுப்பாய்வு

கபசுரக் குடிநீர் – பகுதிப் பொருட்கள் ஒரு பகுப்பாய்வு

கப சுரம் என்பதன் குறி குணங்களாக சித்த மருத்துவம் கூறுவதாவது
1)      தொண்டை நோதல்
2)      மேல் மூச்சு - பெருமூச்சு விடல்
3)      மூச்சுத்திணறல்
4)      இருமல்
5)      விக்கல்
6)      முகம் - கை - கால் வெளுத்தல்
7)      தீவிர வயிற்றுப்போக்கு
8)      இடைவிடாத காய்ச்சல்
9)      முப்பிணியை உண்டாக்கிச் சமயத்தில் கொல்லுதல்

கபசுரக் குடிநீரின் பகுதிப் பொருட்கள்
சுக்கு, திப்பிலி, கிராம்பு, அக்கிரகாரம், சிறு காஞ்சொறி வோ், கறிமுள்ளி வோ், கடுக்காய், ஆடாதோடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சிறு தேக்கு, சீந்தில், நிலவேம்பு, கோரைக்கிழங்கு, பொன்முசுட்டை வோ் ஆகிய 15 வகை மூலிகைகள்

கபசுரக் குடிநீரின் பகுதிப் பொருட்கள்
பண்புகள்
சுக்கு
திப்பிலி
ஆடாதொடை
நிலவேம்பு
கோரைக் கிழங்கு
Ø வீக்கத்தைக் குறைப்பவை
நிலவேம்பு
கோரைக் கிழங்கு
சிறுதேக்கு
பொன்முசுட்டை வேர்
Ø உடல் வெப்பநிலையைச் சீராக்குபவை
நிலவேம்பு
Ø ஆர். என். ஏ. வைரஸ் தொடர்பான காய்ச்சல்களைக் குணப்படுத்துவது. எச்.1என்.1 வைரஸ், கொரோனோ வைரஸ் போன்றவை ஆர்.என்.ஏ. வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Ø உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்லை அதிகரிப்பது.
ஆடாதொடை
Ø மூச்சுக் குழாயை விரிவடையச் செய்வது.
Ø மூச்சுக் குழாய் வீக்கத்தைச் சரிசெய்வது.
Ø இருமலைக் குறைப்பது.
கற்பூரவள்ளி
திப்பிலி
கறிமுள்ளி வேர்
Ø கட்டிப்பட்ட சளியினை வெளியேற்றுபவை.
Ø மூச்சு இரைப்பினைப் போக்குபவை.
கோஷ்டம்
கிராம்பு
Ø சுரத்தினால் ஏற்படும் உடல்வலியைப் போக்குபவை.
சிறுகாஞ்சொறி வேர்
சிறுதேக்கு
Ø ஒவ்வாமையைத் தடுப்பவை.
Ø சளி உற்பத்தியைக் குறைப்பவை.
சீந்தில்
Ø காய்ச்சல் மருந்து.
Ø நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது.
Ø வாதம், பித்தம், கபம் தொடர்பான பிரச்சனையைச் சரிசெய்து ஆயுள் நீட்டிப்பு வழங்குவது.
கடுக்காய்
Ø சளியினைக் கரைத்து மலத்துடன் வெளியேற்றுவது.
Ø பாதிக்கப்படும் செல்களைப் புதுப்பிப்பது.
சீந்தில்
நிலவேம்பு
திப்பிலி
அக்கரகாரம்
Ø நோய் எதிர்ப்பாற்றலைப் பேணும் கூட்டு மருந்து.

கபசுரக் குடிநீரைப் பயன்படுத்தும் முன்…
கபசுரக் குடிநீர்        
Ø உடல் வெப்பத்தைக் கூட்டும்
Ø மலச் சிக்கலை உண்டாக்கும்
மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப அவரது பரிந்துரையின் படி கபசுரக் குடிநீரைப் பயன்படுத்துவது வேண்டப்படுவது ஆகும்.


No comments:

Post a Comment