செயலாராய்ச்சி படிநிலைகள் விளக்கம்
கல்வி சார்
செயலாராய்ச்சியில் பின்வரும் படிநிலைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிநிலைகள்
குறித்த விவரத்தையும் விளக்கத்தையும் கீழே உள்ள அட்டவணை மூலமாக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
வ. எண் |
படிநிலை |
1. |
அறிமுகம் / முன்னுரை இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø ஆய்வு தொடர்பான செய்திகள் / பிரச்சனைகள் / சவால்கள் Ø ஆய்வு குறித்த சுருக்கமான அறிமுகம் |
2. |
பிரச்சனையை அடையாளம் காணுதல் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø ஆய்வுப் பிரச்சனை எங்கு அடையாளம் காணப்பட்டது
என்ற விவரம் Ø ஆய்வுப் பிரச்சனை எப்போது, எப்படி அடையாளம் காணப்பட்டது
என்ற விவரம் Ø இவ்வாய்வு யாருக்காக மேற்கொள்ளப்படுகிறது என்ற
விவரம் |
3. |
பிரச்சனையை வரையறை செய்தல் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø ஆய்வில் பிரச்சனைத் தீர்ப்பதற்காக யார் யாரைத்
தேர்ந்து கொள்கிறார்கள் என்ற விவரம் Ø எந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
என்ற விவரம் Ø எந்த வகுப்பு, எந்தப் பாடத்தில், எந்தக் கற்றல்
விளைவில் மேற்கொள்ளப்படுகிறது என்பன போன்ற விவரங்கள் Ø தேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் |
4. |
ஆய்வின் தேவையும் முக்கியத்துவமும் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø பிரச்சனையை அப்படியே விட்டு விட்டால் என்னவாகும்
என்பது குறித்த விளக்கம் Ø பிரச்சனைக்குத் தீர்வு காண்பதால் என்னென்ன நன்மைகள்
உண்டாகும் என்பது குறித்த விளக்கம் |
5. |
ஆய்வின் நோக்கங்கள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø பிரச்சனையை அடையாளம் கண்டு தீர்க்கும் விதம் Ø பிரச்சனையை வகைபடுத்தியிருக்கும் தன்மை Ø செயல்பாடுகளை உருவாக்கியிருக்கும் விதம் மற்றும்
அதனால் உண்டாகும் தாக்கத்தை அளவிடும் விதம் |
6. |
உத்தேசக் காரணங்கள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø ஆய்வுப் பிரச்சனை உண்டாவதற்கான உத்தேசக் காரணங்களைப்
பட்டியலிடுதல் Ø பிரச்சனையின் பின்புலத்தையும் அது உண்டாகும்
விதத்தையும் விளக்குதல் |
7. |
உத்தேசத் தீர்வுகள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø படிநிலை 6 இல் குறிப்பிட்ட உத்தேச காரணங்களுக்கான
உத்தேசத் தீர்வுகள் Ø உத்தேசக் காரணங்களுக்கு ஒத்து வரும் வகையில்
உத்தேசத் தீர்வுகள் அமைவது நலம் |
8. |
கருதுகோள்கள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø உத்தேசக் காரணங்களிலிருந்து உண்மை காரணத்துக்கு
வரும் விதம் Ø எந்தெந்தத் தீர்வுகளைக் கொடுத்தால் அது நடைமுறைக்கு
உகந்ததாக இருக்கும் என்பதைக் காட்டுதல் Ø ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை சோதித்துத் தீர்வு
காண்பது குறித்த வாக்கியம் |
9. |
ஆய்வியல் அ) ஆய்வு
முறை பரிசோதனை முறை ஆ) வடிவமைப்பு ஒற்றைக் குழு – முன்தேர்வு – பின்தேர்வு வடிவமைப்பு இ) ஆய்வுக்கு
உட்படும் மாணவர்கள் இத்தலைப்பில் ஆய்வுக்கு உட்படும் மாணவர்கள் குறித்த
பின்வரும் விவரங்கள் இடம் பெறலாம். Ø
மாவட்டம் Ø
ஒன்றியம் Ø
பள்ளி Ø
வகுப்பு Ø
மாணவர் எண்ணிக்கை ஈ) ஆய்வுக்கருவி அடைவுத்தேர்வு வினாத்தாளின் தன்மை குறித்த விவரமும்
விளக்கமும் |
10. |
முன்தேர்வு இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø எந்த ஆய்வுக்கருவி மூலம் எப்போது, யாருக்கு,
எப்படி, எங்கே நடத்தப்பட்டது என்ற விவரங்கள் |
11. |
செயல்பாடுகள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø கருதுகோளின் இலக்கை அடைய மேற்கொண்ட செயல்பாடுகள்
குறித்த விளக்கம். Ø விளக்கப்படும் செயல்பாடுகள் படைப்பாற்றல் தன்மையோடும்,
புதுமைத் தன்மையோடும், நவீனத் தன்மையோடும், சுயத் தன்மையோடும், நடைமுறைக்கு உகந்த
தன்மையோடும் அமைவது நலம் |
12. |
பின்தேர்வு முன்தேர்வில் இடம்பெற்ற
வினாத்தாள் அப்படியே இடம் பெற வேண்டும். |
13. |
பகுப்பாய்வு இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø முன்தேர்வு மதிப்பீடு Ø பின்தேர்வு மதிப்பீடு Ø முன் தேர்வு, பின்தேர்வுக்கு இடையிலான வேறுபாடு Ø முன்னேற்ற சதவீதம் |
14. |
முடிவுகள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø கருதுகோளில் எடுத்துக் கொள்ளப்பட்ட நோக்கம் நிறைவேறியது
குறித்த விளக்கம் Ø எத்தனை கருதுகோள்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனவோ
அத்தனை முடிவுகள் இடம்பெற வேண்டும் |
15. |
கல்வியியல் பயன்பாடு இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø ஆய்வு முடிவுகள் எந்தெந்த விதத்தில் யார் யாருக்கெல்லாம்
பயன்படும் என விளக்குதல். Ø ஆய்வின் தேவை மற்றும் முக்கியத்துவம் பகுதியில்
குறிப்பிடப்பட்டது சாத்தியம் என்பதை விளக்கியும் எழுதலாம். |
16. |
பரிந்துரைகள் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø எந்தெந்த இடங்களில் பரிசோதிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள்
பயன்படும் என விளக்குதல். Ø ஒரு குறிப்பிட்ட நிலைமைக்குப் பொருந்திய பரிசோதனை
முடிவு இன்ன பிற நிலைமைகளுக்கும் பொருந்துமா என்பது குறித்து எழுதலாம். Ø ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனையின் முடிவு பிற பாடங்களுக்கும் பொருந்துமா என்பது குறித்தும் எழுதலாம். |
17. |
துணைநூற் பட்டியல் இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø பாடநூல் விவரம் Ø பயன்பட்ட நூல்கள் விவரம் Ø மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள் விவரம் Ø இதழ்களின் விவரம் Ø இணையதள முகவரி |
18. |
பிற்சேர்க்கை இத்தலைப்பில் பின்வரும்
செய்திகள் இடம் பெறலாம். Ø புகைப்படங்கள் Ø வினாத்தாள்கள் Ø புதிய ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால்
அது குறித்த விளக்கம் Ø அட்டவணைகள் Ø இன்ன பிற ஆய்வோடு தொடர்புடைய ஏதேனும் இருப்பின்
அதையும் பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்ளலாம் |
•••••