Saturday 27 February 2021

+2 தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

            மே 3, 2021 இல் துவங்கும் +2 பொதுத்தேர்வுக்கு பிப்ரவரி 26, 2021 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று மார்ச் 6, 2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரூ. 1000/- கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரம் அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://apply1.tndge.org/dge-notification/HRSEC

No comments:

Post a Comment