அண்மையில் கேட்ட இரு விடுகதைகள்
விடுகதைகள்
சிந்தனையைத் தூண்டக் கூடிய முன்னோரின் பொக்கிஷங்கள் ஆகும். சிந்தனை சோர்வுறும் சமயங்களில்
ஒரு விடுகதைக்கு தேநீரைப் போன்ற சுறுசுறுப்பைத் தூண்டக் கூடிய ஆற்றல் இருப்பதை அனுபவத்தில்
உணர்ந்திருக்கிறேன்.
கருத்தரங்கங்களில்
ஒரு விடுகதையைக் கேக்கும் போது அந்த ஒரு விடுகதையே கருத்தரங்கின் முழு விவாதப் பொருளாக
மாறிய நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். அப்படி அண்மையில் ஒரு கருத்தரங்கில் கேட்ட
இரு விடுகதைகள்,
விடுகதை 1.
பந்தக் காலு நாலு
பவளக் காலு நாலு
வெள்ளித்தடி ரெண்டு
வெண்சாமரம் ஒண்ணு.
அது என்ன?
விடுகதை 2.
கருப்பன் நிலத்தில்
வெள்ளைக்காரன்
ஏரு ஓட்டுறான்
விதை விதைக்கிறான்.
அது என்ன?
இவ்விரு
விடுகதைகளின் விடைகளையும் கண்ணை மூடி சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு
விடையைக் கீழே பாருங்கள். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
விடுகதை 1 க்கான விடை :
பசு மாடு
விடுகதை 2 க்கான விடை :
கரும்பலகை
இதுபோன்ற சுவாரசியமான விடுகதைகள் உங்களிடம் இருந்தால் அல்லது
சுவாரசியமான விடுகதைகளைக் கேட்ட அனுபவம் இருந்தால் கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்.
•••••
No comments:
Post a Comment