ஆதார் சேவை சிறப்பு முகாம்
            இந்திய அஞ்சல்
துறை – தஞ்சாவூர் கோட்டத்தின் சார்பாக ஆதார் சேவை சிறப்பு முகாம் தஞ்சாவூர் கோட்டத்தின்
தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமைப் பயன்படுத்தி
புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதாரில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
இச்சிறப்புச் சேவை முகாம்கள் 22.02.2021 முதல் 27.02.2021 வரை நடைபெறும்.
| 
   சேவை  | 
  
   தேவையான ஆவணங்கள்  | 
 
| 
   குழந்தைகளுக்கான
  ஆதார் பதிவு  | 
  
   தாய் / தந்தையின்
  ஆதார் அட்டை, குழந்தையின் அசல் பிறப்புச் சான்று  | 
 
| 
   பெயர் / முகவரி
  மாற்றம்  | 
  
   வாக்காளர் அடையாள
  அட்டை / வங்கிக் கணக்குப் புத்தகம் / கடவுச்சீட்டு / ஓட்டுநர் உரிமம் / பான் அட்டை
  / அரசு அடையாள அட்டை / ரேஷன் அட்டை (முகவரிக்கு மட்டும்)   | 
 
| 
   பிறந்த தேதி
  மாற்றம்  | 
  
   பான் அட்டை
  / கடவுச்சீட்டு / மதிப்பெண் பட்டியல் / அரசு அடையாள அட்டை  | 
 
| 
   அலைபேசி எண்
  / மின்னஞ்சல் மாற்றம்  | 
  
   ஆதார் எண்
  / ஆதார் அட்டை  | 
 
| 
   சேவை  | 
  
   சேவைக் கட்டணம்  | 
 
| 
   ஆதார் பதிதல்
  / 5 வயது / 15 வயது நிரம்பியவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் திருத்தம்  | 
  
   கட்டணம் இல்லை  | 
 
| 
   பெயர், முகவரி,
  அலைபேசி, மின்னஞ்சல் திருத்தம்  | 
  
   ரூ. 50/-  | 
 
| 
   பயோமெட்ரிக்
  புதுப்பிப்பு  | 
  
   ரூ. 100/-  | 
 
விண்ணப்பதாரர்கள் அசல் ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும். இச்சேவைக்கென
முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் முன்பதிவு செய்யும் டோக்கன் பெற்றுக்
கொள்ளலாம். இப்பயனுள்ள தகவலைப் பொதுமக்கள் அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

No comments:
Post a Comment