Friday 5 February 2021

ஒரு லட்சம் பரிசு வெல்ல Comic and Cartoon Competition

ஒரு லட்சம் பரிசு வெல்ல Comic and Cartoon Competition

            உலகளாவிய வேடிக்கை மற்றும் கேலிச்சித்திரப் போட்டியை ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பு, ஐரோப்பிய ஆணையம், பெல்ஜியம், பிரான்ஸ், மெக்சிகோ நாடுகள் ஆகியவை இணைந்து அறிவித்துள்ளன. பெய்ஜிங் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள் வருமாறு,

வயது வரம்பு

18.01.2021 அன்று 18 லிருந்து 25 வரை

போட்டித் தலைப்பு

பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல், அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் திறனில் பெண்கள், பெண் குழந்தை, பெண்கள் மற்றும் பொருளாதாரம், பெண்கள் மற்றும் வறுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட தலைப்புகள்

பட அளவு

A4 அளவுள்ள தாளில் அமைவதாக இருக்க வேண்டும்.

அனுப்பும் படத்தின் பிரிதிறன் அளவு

150 DPI அளவு அல்லது அதற்கு அதிகமாக

அனுப்பும் கோப்பு வடிவம்

JPG, JPEG. PNG அல்லது PDF

படம் குறித்த எதிர்பார்ப்பு

உண்மையானதாகவும், இதுவரை எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும்.

பரிசுகள்

முதல் பரிசு இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ. 1,06,000/-, இரண்டாம் பரிசு இந்திய மதிப்பில் ரூ. 66,000/-, மூன்றாம் பரிசு இந்திய மதிப்பில் ரூ. 44,000/-

சமர்ப்பிக்க கடைசி நாள்

14.03.2021

போட்டி முடிவுகள் வெளியாகும் நாள்

மே மாதம் 2021

மேலும் இப்போட்டி குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.unwomen.org/en/news/stories/2021/1/announcement-comic-and-cartoon-competition

No comments:

Post a Comment