Sunday 14 August 2022

வர்த்தக செய்திகள் – 14.08.2022 (ஞாயிறு)

வர்த்தக செய்திகள் – 14.08.2022 (ஞாயிறு)

பங்குச் சந்தையில் பங்குகளை வாங்க விரும்புவோர் அதற்கெனப் பங்கு பரிவர்த்தனைக் கணக்கைத் துவங்க வேண்டும். இதனை டீமேட் அக்கௌண்ட் என்பர். கொரோனா நோய்த்தொற்று பரவும் வரை இந்தியாவில் 3 கோடி டீமேட் அக்கௌண்டுகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்து 10 கோடி வரை அதிகரித்துள்ளது. இந்தியர்களிடம் டீமேட் கணக்குகளைத் துவங்கும் ஆர்வமும் பங்குகளை வாங்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளதை இந்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை உயர்வானது காட்டுகிறது. டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பங்கு முதலீட்டை அதிகப்படுத்தி பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

No comments:

Post a Comment