Sunday 28 August 2022

இன்றைய செய்திகள் – 29.08.2022 (திங்கள்)

இன்றைய செய்திகள் – 29.08.2022 (திங்கள்)

சிறுதானிய உணவு முறையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கோபுரக் கட்டடம் வெடிபொருட்கள் வைத்துத் தகர்க்கப்பட்டது. 9 விநாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்தது. இடிக்கப்பட்ட ஏப்பெக்ஸ் கட்டடம் 32 தளங்களையும், சியான் கட்டடம் 29 தளங்களையும் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்குத் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

காவிரியில் கரை புரண்டு வரும் தண்ணீரால் பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப் படுகிறது.

தமிழகத்தில் அடுத்து இரு நாட்களுக்கு இருபது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment