கணித மாணவர்களுக்கான அடிப்படைகள்
கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்
தனது வகுப்பைத் துவங்குவதற்கு முன்னர் தனது மாணவர்களுக்குக் கணிதம் சார்ந்த அடிப்படைகள்
தெரிந்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள
வேண்டும்.
சான்றாக உயர் தொடக்க நிலையில்
கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் தனது மாணவர்களுக்குப் பின்வரும் அடிப்படைகளில் நல்ல தெளிவு
இருக்கிறதா என்பதைச் சோதித்துக் கொண்ட பின்னர் தனது வகுப்பைத் துவங்குவது பயனுள்ளதாக
இருக்கும்.
அறிந்திருக்க வேண்டிய கணித அடிப்படைகள்
1) எண்களை ஆயிரம் வரையில்
சரளமாகச் சொல்லத் தெரிதல் மற்றும் எழுதத் தெரிதல். (தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும்
சொல்லவும் எழுதவும் தெரிந்திருத்தல் வேண்டும்.)
2) குறிப்பாக 1 முதல் 20
வரை எழுதச் சொல்லும் போது எண்ணுருவிலும் எழுத்துருவிலும் சிறு பிழைக்கும் இடமில்லாத
வகையில் எழுதுதல் வேண்டும். இதை நீங்கள் ஓர் அடிப்படைத் திறனறித் தேர்வாக நடத்திப்
பார்க்கலாம். வகுப்பின் அனைத்து மாணவர்களும் இத்தேர்வில் இருபதுக்கு இருபது வாங்குகிறார்களா
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழில் எழுதுவதைப் போல ஆங்கிலத்திலும் 1
முதல் 20 வரை எண்ணுருவிலும் எழுத்துருவிலும் எழுதத் தெரிகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்
கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1000, 100000,
10000000 ஆகிய எண்களின் எழுத்துருவையும் எண்ணுருவையும் சரியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும்
எழுதத் தெரிகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3) மூவிலக்க எண்களில் சரளமாகச்
சொல்லவும் எழுதவும் மாணவர்கள் அறிந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பிறகு அதற்கடுத்த
நான்கிலக்க, ஐந்திலக்க, ஆறிலக்க, ஏழிலக்க எண்களையும் சொல்லவும் எழுதவும் தெரிகிறதா
என்பதைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.
4) எண்களை இந்திய முறையிலும்
பன்னாட்டு முறையிலும் கால் புள்ளியிட்டுப் பிரித்து படிக்கவும் எழுதவும் தெரிகிறதா
என்பதைச் சொதித்துக் கொள்ள வேண்டும்.
5) ஒற்றை எண்கள், இரட்டை
எண்களைக் கண்டறியத் தெரிகிறதா என்பதைச் சோதித்துக் கொள்ள வேண்டும். (ஒற்றை எண்கள் மற்றும்
இரட்டை எண்களை எளிமையாக அறியச் செய்வதற்கான ஓர் எளிய செயல்பாடு இந்த வலைபூவில் உள்ளது.)
6) 100 வரையுள்ள எண்களில்
பகா எண்களை மனப்பாடமாக பதிய வைத்துள்ளார்களா என்பதைச் சோதித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால்
பகா எண்களின் பட்டியலைக் கொடுத்து அவர்கள் மனதில் பதியும் வண்ணம் தேவையான பயிற்சிகளை
மேற்கொள்ள செய்ய வேண்டும்.
1 முதல் 100 வரையுள்ள எண்களில்
உள்ள பகா எண்கள்
2 |
3 |
5 |
7 |
11 |
13 |
17 |
19 |
23 |
29 |
31 |
37 |
41 |
43 |
47 |
53 |
59 |
61 |
67 |
71 |
73 |
79 |
83 |
89 |
97 |
7) ஓர் எண்ணின் முன்னி, தொடரி,
இடமதிப்பு குறித்துச் சரியான புரிதல் இருக்கிறதா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஏழு அடிப்படைகளையும்
தனது மாணவர்களிடம் ஒரு கணித ஆசிரியர் சோதித்து உறுதி செய்து கொண்டு பிறகு வகுப்புக்குரிய
பாடங்களைத் தொடங்கினால் கணிதப் பாடத்தை மாணவர்களுக்குப் புரிய வைப்பதில் சிரமம் இருக்காது.
*****
No comments:
Post a Comment