Wednesday 17 August 2022

இன்றைய செய்திகள் – 18.08.2022 (வியாழன்)

இன்றைய செய்திகள் – 18.08.2022 (வியாழன்)

ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாமல் நடத்திய அ.தி.மு.க. தேர்தல்செல்லாது எனவும் இரட்டைத் தலைமையே தொடரும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியில் பிரதமர், குடியரசுத் தலைவரைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சோனியாவிடம் நலம் விசாரித்த பின் சென்னை திரும்பினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.  

விமானங்களில் மீண்டும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் கட்டுபாடுகளையும் பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகளவிலான காற்று மாசுபடுதலில் தலைநகரம் தில்லி முதலிடத்தில் உள்ளது.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கத் தேவையில்லை என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment