Sunday, 14 August 2022

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா - இந்திய முதலீட்டு உலகின் பிதாமகர்

ராகேஷ் ஜூன்ஜூன்வாலா முதலீட்டு உலகின் பிதாமகர்

பங்கு முதலீட்டில் ஈடுபடுபவர்களால் மறக்க முடியாத நபர் வாரன் பப்பெட். முதலீட்டு முறையின் பிதாமகர் என உலகளவில் கொண்டாடப்படுபவர் அவர். பங்கு முதலீடு வேறு வாரன் பப்பெட் வேறு என்று பிரிக்க முடியாத அளவுக்கு பங்கு முதலீட்டில் உச்சங்களைத் தொட்ட பெருமை வாரன் பப்பெட்டுக்கு உண்டு. இன்றளவிலும் அவர்தான் பங்கு முதலீட்டின் சூப்பர் ஸ்டார்.

உலகளவில் ஒரு வாரன் பப்பெட் இருந்தாலும் இந்தியாவின் வாரன் பப்பெட் என்று புகழப்பட்டவர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. இந்தியாவில் தனிநபர் பங்கு முதலீட்டில் முதலிடத்தில் இருப்பவர் அவர்தான். அவரது தற்போதைய பங்குகளின் மதிப்பு சுமார் 21,000 கோடிகளைத் தாண்டும்.

அவரது முதலீட்டுப் பங்குகளை அறிந்து அவரைப் போல முதலீடு செய்து லாபம் பார்த்தவர்கள் அதிகம்.

1985 இல் அவர் தனது பங்கு முதலீட்டைத் தொடங்கிய போது அவரது முதலீடு வெறும் ஐந்தாயிரம்தான். இன்று 37 வருடங்களைக் கடந்து பார்க்கும் போது அவரது ஐயாயிர ரூபாய் முதலீடு இருபத்து ஒன்றாயிரம் கோடியாக மாறியிருக்கிறது. அவரது இந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அப்போது சென்செக்ஸ் 150 புள்ளிகளில்தான் இருந்தது. தற்போது 60,000 புள்ளிகளுக்கு நெருக்கமாக இருக்கிறது. இது 400 மடங்கு வளர்ச்சியாகும். ஆனால் ராகேஷின் வளர்ச்சி என்பது 4,20,00,000 மடங்காகும்.

இன்று 14.08.2022 காலையில் அவர் மும்பையில் மரணமடைந்தார் என்ற செய்தி பங்கு முதலீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகும். அவர் மறைந்தாலும் அவர்தம் பங்கு முதலீட்டு முறைகளும் நுட்பங்களும் மறையாது நின்று முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும்.

அவர் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார் என்பதை அறிந்து அதே பங்குகளை வாங்கி முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிகம் இருந்தார்கள் என்ற ஒரு செய்தி போதும் அவர் எப்படிப்பட்ட முதலீட்டாளராக இருந்தார் என்பதை அறிய. அவரை இந்திய பங்கு முதலீட்டு உலகின் பிதாகமர் எனச் சொல்வது அவ்வளவு பொருந்தும்.

ராகேஷ் செய்திருந்த பங்கு முதலீடுகளைக் கீழே உள்ள அட்டவணையில் நீங்கள் காணலாம்.

S.No.

COMPANY

1

Agro Tech Foods Ltd.

2

Anant Raj Ltd.

3

Aptech Ltd.

4

Autoline Industries Ltd.

5

Bilcare Ltd.

6

CRISIL Ltd.

7

DB Realty Ltd.

8

Delta Corp Ltd.

9

Dishman Carbogen Amcis Ltd.

10

Edelweiss Financial Services Ltd.

11

Escorts Kubota Ltd.

12

Fortis Healthcare Ltd.

13

Geojit Financial Services Ltd.

14

Heads UP Ventures Ltd.

15

Jubilant Pharmova Ltd.

16

Karur Vysya Bank Ltd.

17

Lupin Ltd.

18

Man InfraConstruction Ltd.

19

Multi Commodity Exchange Of India Ltd.

20

NCC Ltd.

21

Orient Cement Ltd.

22

Prakash Industries Ltd.

23

Prakash Pipes Ltd.

24

Prozone Intu Properties Ltd.

25

Rallis India Ltd.

26

Tata Motors Ltd.

27

The Federal Bank Ltd.

28

The Indian Hotels Company Ltd.

29

Titan Company Ltd.

30

TV18 Broadcast Ltd.

31

VA Tech Wabag Ltd.

32

Indiabulls Real Estate Ltd.

33

TARC Ltd.

34

Tata Communications Ltd.

35

Tata Motors Ltd. - DVR Ordinary

36

Wockhardt Ltd.

37

Jubilant Ingrevia Ltd.

38

Nazara Technologies Ltd.

39

Indiabulls Housing Finance Ltd.

40

Steel Authority Of India Ltd.

41

Canara Bank

42

National Aluminium Company Ltd.

43

Metro Brands Ltd.

44

Star Health and Allied Insurance Company Ltd.

No comments:

Post a Comment