Sunday 21 August 2022

இன்றைய செய்திகள் – 22.08.2022 (திங்கள்)

இன்றைய செய்திகள் – 22.08.2022 (திங்கள்)

காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

காலாண்டுத் தேர்வுக்குப் பின் ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறைக்குப் பின்னர் அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாகத் தில்லி சென்றுள்ளார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்குக் கொரோனா தொற்று உறுதியானது.

ஆகஸ்ட் 23 முதல் 25 வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment