Tuesday 16 August 2022

இன்றைய செய்திகள் – 17.08.2022 (புதன்)

இன்றைய செய்திகள் – 17.08.2022 (புதன்)

தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 133 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கிறார். நீட் விலக்கு மசோதா, ஜி.எஸ்.டி. நிலுவை தொடர்பாக விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்று உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டுப் பாடம் வழங்காமல் இருப்பதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி துறைக்கு ஆணையிட்டுள்ளது.

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்குத் தனியார் பள்ளிகளே பொறுப்பு எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகம் அம்பன்தோட்டாவிற்கு வந்தது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment