அதிக மாசுள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள்
சுற்றுச்சூழல் மாசுபாடு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள காலத்தில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அறிந்தும் அறியாமலும் பல விதமாக நீரையும் நிலத்தையும்
காற்றையும் மாசுபடுத்தி வருகிறோம். நம் கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் மாசுபடுத்தும்
செயல்பாடுகளை என்ன செய்வதென்று தெரிந்தும் தெரியாமலும் என்று இரு வகையிலும் கடந்து
கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் ஹெல்த் எபெக்ட்ஸ் என்ற நிறுவனம் உலக அளவில் காற்று
மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் இந்தியத் தலைநகரமான டெல்லிதான் முதலிடத்தில்
உள்ளது. அண்மையில் காற்று மாசு காரணமாக டெல்லியில் விடுமுறை விடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியது
நாம் அறிந்ததே. பொக்குவரத்திலும் ஒற்றை எண்கள் உள்ள வாகனங்கள் ஒரு நாளும் இரட்டை எண்கள்
உள்ள வாகனங்கள் அடுத்த நாளும் இயக்க வேண்டும் என்பன போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட
நிகழ்வுகளும் நாம் அறிந்ததுதான்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆங்கிலேயர் காலத்து கம்பெனி
ஆட்சியின் தலைநகராக இருந்த கல்கத்தா இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநகரங்களும் காற்று மாசுபடுவதில்
ஒன்றையொன்று முந்திக் கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு இந்திய நகரங்களில் காற்று
மாசுபட்டுக் கொண்டிருக்கின்றது.
நகரங்கள் விரிவாகிக் கொண்டே போவதும், விரிவாகும் நகரங்களில்
பெருகிக் கொண்டே போகும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் காற்று மாசுபடுதலில் முக்கிய பங்கினை
வகிக்கின்றன.
நகரங்களைக் கிராமங்களாக மாற்றுவது இதற்கு நல்லதொரு தீர்வாக
இருக்கலாம். என்றாலும் அந்தத் தீர்வு செயல்படுத்த முடியாத ஒன்று. ஆனால் கிராமங்களை
நகரங்களாக ஆக்காமல் இருப்பது சாத்தியமான ஒரு தீர்வே. இந்தியாவில் இயன்றவரை நகரமயமாதல்
போக்கினைக் குறைக்கலாம்.
*****
No comments:
Post a Comment