Friday, 31 January 2020

எந்தெந்த ரத்தம் எந்தெந்த ரத்தத்துக்குப் பொருந்தும் தெரியுமா?

எந்தெந்த ரத்தம் எந்தெந்த ரத்தத்துக்குப் பொருந்தும் தெரியுமா?
பொதுவாக ஒரு குறிப்பிட்ட ரத்த வகை கொண்டவருக்கு அதே ரத்த வகையைச் செலுத்துவது ஏற்புடையது ஆகும். எனினும் கீழே உள்ள அட்டவணையின் படி ரத்தத்தைச் செலுத்துவதும்,பெறுவதும் ஏற்புடையதாகும்.

இரத்தம் அளிக்கும் ரத்த வகை
இரத்தம் பெறும் ரத்த வகை
A+
A+, AB+
A-
A+, AB+, A-, AB-
B+
B+, AB+
B-
B+, AB+, B-, AB-
O+
O+, A+, B+, AB+
O-
அனைத்து வகை ரத்தமும் ஏற்புடையது
AB+
AB+
AB-
AB+, AB-

Thursday, 30 January 2020

பள்ளி ஆண்டாய்வு படிவம்

பள்ளி ஆண்டாய்வு படிவம்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டாய்வு குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய இப்படிவம், பள்ளி ஆண்டாய்வின் போது ஆய்வாளரால் நிரப்பப்பட வேண்டியது ஆகும். பள்ளி ஆண்டாய்வின் போது பயன்படும் இத்தகு ஆண்டாய்வு படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


கொரோனா வைரஸ் - தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் - தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அறிவிப்பு
சீனாவின் ஊகான் மாகாணத்தில் உண்டான கொரோனா வைரஸிற்கு இதுவரை  170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது கோரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஊகான் மாகாணத்திலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய மாணவர் ஒருவருக்கு கோரோனா வைரஸின் தாக்குதல் இருப்பதாகவும், அவர் தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளதாகவும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுவாக கோரோனா வைரஸின் அறிகுறிகள் பின்வருமாறு இருப்பதாகக் கூறப்படுகிறது.

1.      தொடர் காய்ச்சல்
2.      காய்ச்சலோடு நீடித்த இருமல்
3.      தலைவலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள்
4.      அதிகமான நோய்த்தொற்று
5.      தொண்டையில் ஏற்படும் வறட்சி
கொரோனா வைரஸ் குறித்த தமிழ்நாடு சுகாதார துறையின் அறிவுரைகளைப் பெற 
கீழே சொடுக்கவும் :

Click Here to Download
இந்த வைரஸ்க்கான  நோய் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இந்நோய் தாக்குதலால் உயிர் இழப்பவர்களைத் தடுக்க முடியாமல் மருத்துவ உலகம் போராடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோரோனா வைரஸ் காய்ச்சலுக்கான 24 மணி நேர அவசர உதவி எண்ணும் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
24 மணி நேர அவரச உதவி எண் : 011-23978046


Wednesday, 29 January 2020

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
            இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழு பற்றிற்கும் இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
இதை PDF ஆக பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் :


How to Prepare Monthly Return in Word Document – Revised Version

How  to Prepare Monthly Return in Word Document – Revised Version
மாதாந்திர அறிக்கை எனும் Monthly Return ஐ மேலும் புதிய எளிய வடிவில் Word Document இல் நீங்களே தட்டச்சு செய்து Print எடுக்க கீழே உள்ள இணைப்பில் உள்ள புதிய Word Document ஐ பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளி தொடர்பான விவரங்களை மட்டும் தேவையான இடங்களில் சொடுக்கிப் பதிவு செய்தால் போதுமானது. தங்கள் பள்ளியின் மாதாந்திர அறிக்கையை இவ்வண்ணம் ஒரு மாதத்துக்குத் தயார் செய்து விட்டால் அடுத்தடுத்த மாதங்களுக்குத் தேவையான மாற்றங்களை மட்டும் செய்து எளிமையாக அச்செடுத்துக் கொள்ளலாம். Print Out ஐ Legal Paper இல் எடுக்கவும். முன்பு இவ்வலைப்பூவில் பதிவிட்ட Monthly Return வடிவத்தை விட எளிமையான இவ்வடிவம் ஆசிரியர்களுக்குப் பயன் தரக் கூடியது. Monthly Return க்கான புதிய Word Document ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.




IT Form – 2020 Automatic Excel Calculation Statement

IT Form – 2020 Automatic Excel Calculation Statement
            2020 2020 ஆம் ஆண்டிற்கான வருமான வரி படிவத்தை இணைப்பில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பின்வரும் விவரங்களை உரிய கலங்களைச் சொடுக்கி தட்டச்சு செய்து நிரப்பினால் வருமான வரிக் கணக்கு Excel Sheet இல் தானாகவே கணக்கீடு ஆகி விடும்.
            Page 4 – என்பதில் உள்ள படிவத்தின் நான்காம் பக்கத்தில் XXXXX என்பதில் சொடுக்கி அதை நீக்கிப் பெயரைப் பதிவு செய்து Basic pay, HRA, MA, Spcl Allow, LIC, Income tax, Salary received date ஆகிய விவரங்களோடு E.L.Surrender, DA Arrear I & II, Bonus, One day arrear Salary, Others இவைகளில் எவற்றைச் சேர்க்க வேண்டுமோ அவற்றைச் சேர்க்கவும். இதைச் செய்த பின் Page 1 – என்பதில் படிவத்திற்கான 3 பக்கங்களும் உள்ளன. அதில் முதல் பக்கத்தில் Name, Designation, Date of Birth, Office address, PAN No., Cell No., Bank AC No., IFSC Code, Aadhaar No., போன்ற விவரங்களை நிரப்பி, Actual rent என்பதை நிரப்பி, Deduction Under Chapter VI-A இல் தேவையான கலங்களை நிரப்பவும். இவற்றை நிரப்பினால் 2 ஆம் பக்கத்தில் கட்ட வேண்டிய வருமான வரி தொகை தெரிந்து விடும். பக்கம் 3 இல் Saving Particulars Premium அட்டவணையை நிரப்பவும். இப்படிவத்தை Legal தாளில் அச்செடுத்து உரிய இடங்களில் கையொப்பம் இட்டால் உங்களுக்கான வருமான வரிப் படிவம் தயாராகி விடும்.
நிரப்புவதற்கான வருமான வரிப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

மேலும் வருமான வரிப் படிவத்தை நிரப்புவதற்குத் தங்களுக்குத் தேவையான குறிப்புகளுக்குக் கீழே உள்ள விவரங்களைப் படிக்கவும்.
1)      4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]
2)      நிலையான கழிவு (Standard deduction) ரூ. 50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.
3)      Housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
4)      மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.
5)      Housing loan - வட்டி அதிகபட்சமாக  ரூ. 2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.
6)      Housing loan - அசல் தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.
7)      Housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.
8)      CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு ரூ. 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ. 50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

9)      School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)
10)  LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று  படிவத்துடன் இணைக்கவும்).
11)  80DDB - Medical Treatment - ரூ. 80,000/- வரை காண்பிப்பவர் 10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
Citizens – ரூ. 40,000,
Senior Citizens - ரூ. 60,000,
Super Senior Citizens - ரூ. 80,000
12)  மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ரூ. 75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.( ரூ. 1,25,000 - In case of severe disability)
13)  மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.
14)  கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.
15)  நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.
16)  வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%
17)  வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.
18)  Taxable income ரூ. 5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ. 12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.
19)  Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
இத்தகவல்கள் தங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தால், தயவுசெய்து இவ்விணைப்பை மற்றவர்களின் பயன்பாட்டிற்கும் பகிரவும்.


Tuesday, 28 January 2020

January 4th Week - 8th Std Tamil - Lesson Plan with Mind Map Videos

ஜனவரி நான்காம் வாரம் – எட்டாம் வகுப்பு தமிழ் - பாடத்திட்டம்
ஜனவரி மாதம் - நான்காம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 1 :        அ) அறிவுசால் ஔவையார் (விரிவானம்)
                        ஆ) வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் (இலக்கணம்)
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :


இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், அறிமுகம், புரிதல், மனவரைபடம், ஒருங்கமைத்தல், வலுவூட்டுதல், மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தோடு மனவரைபடம் வரைவதற்கான காணொலிக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது. இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இவ்விணைப்பைப் பகிரவும்.


Monday, 27 January 2020

TNPSC Annual Planner – 2020

TNPSC Annual Planner – 2020
TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான அரசுப் பணித் தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


January 3rd Week - 8th Std Tamil - Lesson Plan with Mind Map Videos

ஜனவரி மூன்றாம் வாரம் – எட்டாம் வகுப்பு தமிழ் - பாடத்திட்டம்
ஜனவரி மாதம் - மூன்றாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 1 : அ) பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :

இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், அறிமுகம், புரிதல், மனவரைபடம், ஒருங்கமைத்தல், வலுவூட்டுதல், மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தோடு மனவரைபடம் வரைவதற்கான காணொலிக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது. இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இவ்விணைப்பைப் பகிரவும்.


January 2nd Week - 8th Std Tamil - Lesson Plan with Mind Map Videos

ஜனவரி இரண்டாம் வாரம் – எட்டாம் வகுப்பு தமிழ் - பாடத்திட்டம்
ஜனவரி மாதம் - இரண்டாம் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 1 : அ) விடுதலைத் திருநாள்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :

இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், அறிமுகம், புரிதல், மனவரைபடம், ஒருங்கமைத்தல், வலுவூட்டுதல், மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தோடு மனவரைபடம் வரைவதற்கான காணொலிக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது. இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இவ்விணைப்பைப் பகிரவும்.


January 1st Week - 8th Std Tamil - Lesson Plan with Mind Map Videos

ஜனவரி முதல் வாரம் – எட்டாம் வகுப்பு தமிழ் - பாடத்திட்டம்
ஜனவரி மாதம் - முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 1 : அ) படைவேழம்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :

இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், அறிமுகம், புரிதல், மனவரைபடம், ஒருங்கமைத்தல், வலுவூட்டுதல், மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தோடு மனவரைபடம் வரைவதற்கான காணொலிக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது. இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இவ்விணைப்பைப் பகிரவும்.


Sunday, 26 January 2020

பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு நெறிமுறைகள்

பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு நெறிமுறைகள்

வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், நலத்திட்டங்கள் செயல்படுத்துதல், பள்ளி சுற்றுப்புறச் சூழல் ஆகியவை சிறந்து விளங்கிடப் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் (Surprise Visit) மற்றும் ஆண்டாய்வு செய்தல் (Annual Inspection) மிகவும் அவசியமாகும். எனவே பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல், ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பள்ளிக்கல்வி துறையால் அறிவுறுத்தப்படுகிறது.
1. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின் போது காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக் கொடி ஏற்றுதல், கொடிப் பாட்டு, உறுதிமொழி, திருக்குறள் வாசித்தல், தலைப்புச் செய்திகள் வாசித்தல், பொது அறிவுச்செய்தி தெரிவித்தல், ஆசிரியர் அறநெறி உரை மற்றும் நாட்டுப்பண் பாடுதல் போன்றவை இடம்பெறுதலை உறுதி செய்தல் வேண்டும்.
2. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும்.
3. ஒரு மாதத்திற்குக் குறைந்தது 20 பள்ளிகள் முன் அறிவிப்பின்றி பார்வையும், 5 பள்ளிகள் ஆண்டாய்வும் மேற்கொள்ள வேண்டும்.
4. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை மற்றும் ஆண்டாய்வின் போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன் மற்றும் கையெழுத்துப் பயிற்சியேடு, கட்டுரைப் பயிற்சியேடு திருத்தம், Graph பயிற்சியேடு, Geometry பயிற்சியேடு திருத்தம், Map drawing பயிற்சியேடு திருத்தம், மதிப்பெண் பதிவேடு (Progress Report) மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் Achievement Register இல் மாணவர்களின் கற்றல் அடைவுகள் சார்ந்த பதிவுகள் அனைத்தும் முறையாக பதியப்பட்டுள்ளதா என்பதை ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் .
5.யோகா, பாட இணை செயல்பாடுகள் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும்.
6. அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்குச் சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை வழங்கல் பதிவேட்டின் (Issue Register) அடிப்படையில் ஆய்வு செய்து உறுதி செய்தல் வேண்டும்.
7. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின் போது சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்தல் வேண்டும்.
8.பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வையின் போது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, மடிக்கணினி, குறுந்தகடுகள் பயன்பாடு, விரைவு துலங்கள் குறியீட்டு பயன்பாடு, ஆங்கில அகராதி (Dictionary) பயன்பாடு, அறிவியல் மற்றும் கணித உபகரணப்பெட்டி பயன்பாடு, ஆகியன சார்ந்தும் ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் மாணவர்களுக்கு Mass Drill நடத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்தல் வேண்டும்.
9.மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை அதிகரிக்க உதவும் Spoken English பயிற்சி கட்டகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், அந்தப் பயிற்சி கட்டகங்களைக் கொண்டு வாரம் ஒரு பாடவேளை மாணவர்களுக்கு Spoken English பயிற்சி ஆசிரியர்களால் அளிக்கப்படுவதையும் ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும்.
10. நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளில் கல்வி செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

11 . பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வு மேற்கொள்ளும் பள்ளியில் SLAS தேர்வில் மாணவர்கள் பெற்ற கற்றல் அடைவு குறித்து ஆய்வு மேற்கொள்ளல் வேண்டும். NAS தேர்வு அப்பள்ளியில் நடத்தப்பட்டிருப்பின் NAS தேர்வில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
12 வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் நடத்தப்பட்ட SLAS / NAS தேர்வுகள் சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று தங்களது குறிப்பேட்டில் (Diary) குறித்து வைத்திருத்தல் வேண்டும்.
13 . அரசாணை (நிலை) எண். 145 , பள்ளிக் கல்வித் (தொக 3(2)) துறை,நாள். 20.08.2019 மற்றும் அரசாணை (நிலை) எண். 202 , பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை, நாள்.11.11.2019 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் தவறாமல் பின்பற்றப்படுகிறதா என்பதை பள்ளிப் பார்வை மற்றும் ஆண்டாய்வின் போது உறுதி செய்தல் வேண்டும்.
14. ஒவ்வொரு மாதமும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்துதல் வேண்டும். அக்கூட்டத்தில் பள்ளி ஆண்டாய்விலும், பள்ளி பார்வையிலும் கண்டறியப்பட்ட சிறப்பம்சங்கள் குறித்து விவாதித்தல் வேண்டும். மேலும் மாதவாரியான பாடத்திட்டம் முடித்தல், மாணவர்களின் பயிற்சியேடுகள் திருத்தம் செய்தல், பள்ளியின் சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் விவாதித்தல் வேண்டும். மேலும் மாணவர் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து விவாதித்து அவர்கள் பள்ளிக்கு வருகை தராத காரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, அம்மாணவர்களை மீளப் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
15. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வு செய்யும் போது பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை - நீக்கல் பதிவேடு, ஆசிரியர் வருகைப்பதிவேடு, மாணவர் வருகைப் பதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்டப்பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை பதிவு செய்யும் வழங்கல் பதிவேடு மற்றும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் குறித்த பதிவேடுகள் ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும். அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்குச் சென்றடைந்துள்ளதா என்பதை துல்லியமாக ஆய்வு செய்தல் வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு உண்ணும் அனைத்து மாணவர்களுக்கும் 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும். ஆதிதிராவிட / மிகவும் பின்தங்கிய / பின்தங்கிய / சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் துறைகளின் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உரிய மாணவர்களுக்குப் பெற்று வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும்.
16. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை மற்றும் ஆண்டாய்வு செய்யும் பள்ளிகளில் ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியம், வருடாந்திர ஊதிய உயர்வு, தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் ஆசிரியர் சேமநல நிதி ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தல் வேண்டும்.
17. கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் விவரம் (Student Profile), ஆசிரியர் விவரம் (Teachers Profile), பள்ளிவிவரம் (School Profile) போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் இவ்விவரங்கள் பள்ளிகளில் உள்ள பதிவேடுகளுடன் ஒத்து உள்ளதா என்பதையும் ஆய்வில் உறுதி செய்தல் வேண்டும்.
18. பள்ளி கட்டட வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
19. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வின் போது மராமத்து செய்ய வேண்டிய பள்ளிக் கட்டடங்கள், பள்ளி வளாகத்தில் பயன்படுத்த முடியாத பழுதடைந்த கட்டடங்கள், பழுதடைந்த சுற்றுச்சுவர், உயர் அழுத்த மின்கம்பங்கள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகள், முட்புதர்கள் போன்றவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பின் அவை சார்ந்து உயர் அலுவலர்களுக்கும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி இயக்ககத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் / அறிவுரைகள் சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றதா என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை / ஆண்டாய்வின்போது உறுதி செய்தல் வேண்டும்.
20. குழந்தைகள் தின விழாப் பேருரையில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் - அறிவுரைகள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை ஆய்வின் போது உறுதிசெய்தல் வேண்டும்.

21. மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் உடல்சார்ந்த பயிற்சிகள் Physical activities - ஐ காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்ன ர் 15 நிமிடங்களும், மாலை 45 நிமிடங்களும் செய்வதனை ஆய்வின்போது உறுதிசெய்தல் வேண்டும். (மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்துதல் வேண்டும்).
22. உதவி பெறும் பள்ளிகளின் மேலாண்மைப் புதுப்பித்தல், பதிவு செய்தல் , நான்கு வகைச் சான்றிதழ்கள் பெறுதல், ஆண்டுவாரியான ஆசிரியர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும்.
23. பணியிட நிர்ணயம், கற்பித்தல் மானியம் மற்றும் மாணவர் வருகைப்பதிவேடு, ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, சம்பளப்பதிவேடு, அளவைப் பதிவேடு ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்திடல் வேண்டும். மேலும் தங்கள் ஒன்றியத்தில் உள்ள அனைத்து உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் , சுயநிதி தொடக்க நடுநிலை மற்றும் நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் துவக்க அனுமதியும் , தொடர் அங்கீகாரமும் பெற்றிருத்தலை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்  - 2009 இன் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி நுழைவுநிலை வகுப்பில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர் சார்ந்த விவரங்கள் உரிய பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.
24. பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வின் போது மேற்கண்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தவறாது ஆய்வு செய்திடல் வேண்டும். மேலும் SMC கூட்டத் தீர்மானப் பதிவேட்டையும் ஆய்வு செய்திடல் வேண்டும்.
25. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது முன் அறிவிப்பின்றி பார்வையிடுதல் வேண்டும் . மேலும் ஆண்டிற்கு ஒரு முறை ஆண்டாய்வு செய்தல் வேண்டும். மேலும் ஆசிரியர் சேமநலநிதி அனுமதிக்கும் கோப்புகள், ஆசிரியர் சேமநலநிதி சார்ந்த பதிவேடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் அறிவிப்பின்றி பார்வையிடும்பொழுது, ஆண்டாய்வின்போதும் இச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
26. முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தவறாமல் ஆய்வுக்கூட்டம் நடத்துதல் வேண்டும். மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்களின் பள்ளிப் பார்வை, பள்ளி ஆண்டாய்வு மற்றும் இச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் தொடர்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவைகளுக்குத் தவறாமல் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் அடுத்து வருகின்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் தொடர் நடவடிக்கை எடுத்த விவரத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.
27. முதன்மைக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாதம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் கீழ்க்கண்ட மூன்று படிவங்களில் விவரங்களைப் பெற்று தொகுத்து தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ஒவ்வொரு மாதமும் 10 - ம் தேதிக்குள் தவறாமல் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
*****

Saturday, 25 January 2020

வங்கித் தேர்விற்கான IBPS உத்தேச தேர்வு அட்டவணை

வங்கித் தேர்விற்கான IBPS உத்தேச தேர்வு அட்டவணை
வங்கித் தேர்விற்கான IBPS உத்தேச தேர்வு அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.


Friday, 24 January 2020

தொடங்கியது CTET விண்ணப்பப் பதிவு

தொடங்கியது CTET விண்ணப்பப் பதிவு
சிபிஎஸ்இ, நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான CTET (Central Teacher Eligibility Test) விண்ணப்பப்பதிவு ஜனவரி 24 முதல் தொடங்குகிறது.
ü விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 24 ஜனவரி, 2020
ü விண்ணப்பப் பதிவு முடியும் நாள் : 24 பிப்ரவரி, 2020
ü விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 27 பிப்ரவரி, 2020
ü தேர்வு நடைபெறும் நாள் : 5 ஜூலை, 2020
CTET தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணையதள முகவரியைச் சொடுக்கவும் :