பில் கேட்ஸூக்குப் பிடித்த புத்தகம்
ஒவ்வொரு வருடமும்
தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பட்டியலிடும் பில் கேட்ஸ் இந்த ஆண்டு தனக்குப் பிடித்தமான
புத்தகமாக ‘Why We Sleep’ என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதராகப்
பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என்பதை வலியுறுத்திச்
சொல்கிறது இப்புத்தகம். மனிதர்களது நினைவாற்றல், படைப்பாற்றல், நோய் எதிர்ப்பு ஆற்றல்
ஆகியவற்றை வளர்க்கும் திறன் எட்டு மணி நேர உறக்கத்துக்கு இருப்பதாக இந்தப் புத்தகம்
குறிப்பிடுகிறது. எட்டு மணி நேரத்துக்குக் குறைவாக உறங்கும் போது அது நினைவாற்றல்,
படைப்பாற்றல், நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பாதிக்கிறது.
இந்தப் புத்தகத்தைப்
படித்த பிற்பாடாவது மனிதர்கள் எட்டு மணி நேரம் உறங்குவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்
என எதிர்பார்க்கிறார் பில் கேட்ஸ்.
அடி ஆத்தி!
இந்தப் புத்தகத்தைப்
படித்த பிற்பாடு எட்டு மணி நேர உறக்கமா? நமக்கு எல்லாம் புத்தகத்தை எடுத்தாலே பனிரெண்டு
மணி நேரம் உறக்கம் அல்லவா வருகிறது. ஆகவே இந்தப் புத்தகம் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும்
பொருந்தலாம். நம் நாட்டுக்குப் பொருந்துமா என்பது சந்தேகத்துக்கு உரியதே.
No comments:
Post a Comment