Wednesday, 8 January 2020

புதுமை புனைய விழையும் ஆசிரியர்களுக்கான ZIIEI பயிற்சி

புதுமை புனைய விழையும் ஆசிரியர்களுக்கான ZIIEI பயிற்சி
ZIIEI பயிற்சி என்பது Zero Investment Innovations For Education Initiatives பயிற்சி என்பதன் சுருக்கம் ஆகும்.
இப்பயிற்சியை ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வள மையமும், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமும் இணைந்து வழங்குகின்றன.
இப்பயிற்சியில் Sri Aurobindo Society இன் களப்பணியாற்றும் பயிற்சியாளர்

Community Participation
New Age Teaching Techniques
Human Values
Learning Through Games
Future Envisioning
Healthy Students, Better Learner
Nation Building : Environment Protection

எனும் ஏழு தலைப்புகளில் ஆசிரியர் பெருமக்கள் செய்த Zero Investment Innovations Initiatives பற்றி விளக்குகிறார்.
பயிற்சியின் நிறைவில் படிவம் வழங்கப்பட்டு பங்கேற்ற ஆசிரியர்களின் இது போன்ற Zero Investment Innovations முயற்சிகள் பதிவு செய்யப்படுகிறது. இத்தொகுப்பு தேசிய அளவில் தொகுக்கப்பட்டு சிறந்த முன்னெடுப்புகள் புத்தகமாக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு அறிவுப் பரவல் (Knowledge Sharing) செய்யப்படுகிறது. மேலும் சிறந்த முன்னெடுப்புகள் மாவட்ட அளவில், மாநில் அளவில், தேசிய அளவில் பரிசு வழங்கப்பட்டுச் சிறப்பிக்கவும் படுகிறது.
பயிற்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் செயலி (App) மூலம் பதிவு செய்யப்பட்டு செயலி மூலமே பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் அச்செயலியில் ஆசிரியர்களின் சிறந்து Zero Investment Innovations முன்னெடுப்புகளைப் பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. செயலியை Play store இல் Innovative Pathshala என தட்டச்சு செய்து திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

www.ziiei.com


No comments:

Post a Comment