Saturday, 4 January 2020

BIO METRIC புதிய RD Service உள்ளீடு செய்யும் முறை

BIO METRIC புதிய RD Service உள்ளீடு செய்யும் முறை
கணினியின் This PC அல்லது Control Panel இல் Uninstall என்ற கலத்தைச் சொடுக்கி அதில் Mantra Registered Service Device என்பதை Uninstall செய்து நீக்கவும்.
Google Chrome போன்ற browser மூலம் http://basreports.attendance.gov.in/downloads/ என்ற இணையதளப் பக்கத்தைத் தட்டச்சு செய்து திறக்கவும். அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கியும் திறக்கலாம்.

அப்போது தோன்றும் திரையில் Please Select Your State என்பதில் Tamilnadu என்பதைத் தேர்ந்தெடுத்து Go என்பதைச் சொடுக்கவும். சொடுக்கியப் பின் தோன்றும் திரையில் மூன்றாவதாக உள்ள MANTRA SOFTTECH (MODEL-MFS100) (V1.0.1) Download 25.06 என்பதைச் சொடுக்கி அதைப் பதிவிறக்கம் செய்யவும்.
பதிவிறக்கம் செய்த புதிய Mantra Registered Service Device ஐ கணினியில் நிறுவி Finish கொடுத்து Mantra Device ஐ இணைத்து BAS ஐ சொடுக்கி வழக்கம் போல் கைரேகையைப் பதிந்து வருகையைப் பதிவு செய்யலாம்.
இச்செயல் முறையில் எக்காரணத்தைக் கொண்டும் BAS கோப்பினை நீக்கம் செய்து விடாமல் பழைய Mantra Registered Service Device ஐ மட்டும் நீக்கம் செய்து புதிய Mantra Registered Device ஐ நிறுவ வேண்டும்.


No comments:

Post a Comment