நிராகரிக்கப்பட்ட கருணை மனு
2012 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் தில்லி மருத்து மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த
வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நால்வரின் தூக்குத் தண்டனையை தில்லி உயர்நீதி
மன்றமும், உச்சநீதி மன்றமும் உறுதி செய்த நிலையில், குற்றவாளிகளின் கருணை மனுவையும்
நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இதனால் அவர்களின் தூக்குத் தண்டனை
உறுதியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி (01.02.2020) காலை 6.00 மணி அளவில் குற்றவாளிகள்
தூக்கில் இடப்படுகின்றனர். இவ்வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அதில்
ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதும், மற்றொருவர் சிறார் என்பதால் 3 வருடம்
கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு விடுதலையானார் என்பதும், தற்போது அதில் நால்வரின்
தண்டனை உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012 இல் நடைபெற்ற இச்சம்பவத்தின் தீர்ப்புக்காக நிர்பயாவின் பெற்றோர்கள் எட்டு வருட
காலம் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment