பிரெடரிக் ப்ரோபெல் குறித்து அறிந்து கொள்வோமா?
மழலையர்
கல்விக்கான சிறந்த பங்களிப்பை வழங்கியவர் பிரெடரிக் ப்ரோபெல். இவர் உலகப் புகழ் பெற்ற
கல்வியாளர். ஜெர்மனியைச் சேர்ந்தவர்.
மிகச்
சிறந்த கல்வியாளரான பெஸ்டலாசியால் ஈர்க்கப்பட்டவர் ப்ரோபெல் ஆவார். இவர் பெஸ்டலாசியுடன்
இரண்டு ஆண்டுகள் பணியாற்றியும் உள்ளார். அவரை தன் ஆசிரியராகவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ப்ரோபெல்லின் கல்விக் கோட்பாடுகள்
:
இந்த
உலகில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்த ஒற்றுமையைப் புரிந்து கொள்ளும்
ஒருவர் தன்னை அறியலாம்; பிறரை அறியலாம்; இந்தப் பரந்த உலகைப் புரிந்து கொள்ளலாம்.
எண்ணங்கள்,
உணர்வுகள், செயல்பாடுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய முழுமையான உயிரினம் குழந்தை
ஆகும்.
ஒவ்வொரு
குழந்தையும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களால் செய்ய முடியாததை விட என்ன செய்கிறார்கள்
என்பதே கற்றலுக்கான தொடக்கம் ஆகும்.
குழந்தைகள்
செயல் வழியே கற்கின்றனர். தங்கள் கற்றல் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு உண்டு.
குழந்தைகளுக்கு
மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். அவர்களின் திறமைகளை
வெளிக்கொணர உதவ வேண்டும்.
குழந்தைகளின்
வாழ்வில் உறவுகள் முக்கியமானவை. எனவே பெற்றோர்கள், பாதுகாவலர்கள், குடும்பத்தினர்கள்,
ஆசிரியர்கள் ஆகியோர் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
குழந்தைகளின்
படைப்பாற்றல் வளர சுற்றியிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது படைப்புகளில்
தினசரி வாழ்க்கை, சமுதாயம், பண்பாடு போன்றவை பிரதிபலிக்கும்.
குழந்தைகள்
விளையாடும் போது அவர்களது சிந்தனைகள் மேம்படுகின்றன. குழந்தைகள் விளையாடுவதை ஊக்குவிக்க
வேண்டும்.
குழந்தைகளுக்குச்
சுதந்திர உணர்வு அவசியம். எனவே ஆசிரியர்கள் குழந்தைகளிடம் கட்டளையிடும் போக்கைக் கையாளக்
கூடாது.
குழந்தைகள்
இயற்கையைப் புரிந்து கொள்ள கல்வி துணை செய்ய வேண்டும். குழந்தைகள் தங்கள் கல்வியின்
வாயிலாக அனைத்து உயிர்களின் தொடர்புகளையும் அறிந்து கொள்ள வேண்டும். இது அவர்களது சிந்தனையைப்
பெரிதாக்கும். இதனால் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த கேள்விகள் அவர்களுக்கு
எழத் தொடங்கும்.
ப்ரொபெல்
குறித்தும் அவரது கோட்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்வது கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
பயனுள்ளதாகும்.
இது
போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நன்றி!
வணக்கம்!
*****