பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில்
ஆசிரியர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
2) சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16 இல் தொடங்கி
மூன்று நாட்கள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தெரிவித்துள்ளார்.
3) தமிழக மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் காட்சிகள் மூலம்
69 கோடி ரூபாய்க்கு புத்தககங்கள் விற்பனை ஆகியுள்ளன.
4) சம்பா பருவ நெல்சாகுபடி குறித்த விவரங்கள் எண்ம முறையில்
நூறு விழுக்காடு சரியாகக் கணக்கிடப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்.
5) கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
6) பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா நாட்டின் உயரிய விருது
வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் பெற்றுள்ள சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை
19 ஆக உயர்ந்துள்ளது.
7) மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று ஒரே
கட்டமாக நடைபெற்றது.
8) கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம்
ரூபாய் அதிகரித்துள்ளது.
9) கருத்தடை மாத்திரைகளால் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதாக
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
10) உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்து
விட்டன.
English News
1) The incident of a teacher being stabbed
to death in Mallipattinam Government High School in Thanjavur district has
created shockwaves across Tamil Nadu.
2) The Chennai International Book Festival
will be held for three days starting from January 16, School Education Minister
Anbil Mahesh Poyyamozhi has said.
3) Books worth Rs 69 crore have been sold
through book fairs held in Tamil Nadu districts.
4) Agriculture Minister M.R.K. Panneerselvam
has said that the details of the Samba season paddy cultivation will be
calculated hundred percent correctly using octal method.
5) The High Court has ordered the transfer
of the Kallakurichi poisoned liquor case to the CBI.
6) Prime Minister Narendra Modi has been
awarded Guyana's highest award. With this, the number of international awards
received by the Prime Minister has increased to 19.
7) The Maharashtra assembly elections were
held in a single phase yesterday.
8) The price of gold has increased by a
thousand rupees per sovereign in the last two days.
9) A study has revealed that birth control
pills can affect blood pressure.
10) It has been a thousand days since Russia
launched a war on Ukraine.
No comments:
Post a Comment