Wednesday, 13 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 14.11.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) இன்று குழந்தைகள் தினம். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

2) கிண்டி அரசு சிறப்பு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அரசு மருத்துவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

3) ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல், வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் 11 மாநிலங்களின் 31 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

4) அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும் என TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர் உறுதி அளித்துள்ளார்.

5) ஆக்கிரமிப்பு கட்டடங்களைச் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6) நாளை மறுநாள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திரமோடி நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்குச் செல்கிறார்.

7) காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர தமிழக மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English News

1) Today is Children's Day. The 135th birth anniversary of India's first Prime Minister Jawaharlal Nehru is being celebrated with enthusiasm across the country as Children's Day.

2) Government doctors are going on strike from today in response to the incident where a doctor at the Guindy Government Special Hospital was stabbed.

3) The first phase of the Jharkhand assembly elections, the Wayanad parliamentary by-election and the by-elections for 31 assembly constituencies in 11 states were held yesterday.

4) TNPSC Chairman S.K. Prabhakar has assured that the results of competitive examinations for government jobs will be released quickly.

5) The Supreme Court has ruled that encroached buildings should not be demolished illegally.

6) The day after tomorrow, Prime Minister Narendra Modi will embark on a five-day tour to Nigeria, Brazil and Guyana.

7) The Meteorological Department has said that rains will continue in the north coastal districts of Tamil Nadu due to a low pressure area.

No comments:

Post a Comment