Tuesday, 19 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.11.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) நவம்பர் 23 இல் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) நவம்பர் 25 இல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

3) தொடர் கனமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4) டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை அடைந்துள்ளது.

5) இஸ்ரோவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

6) இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேறுமாறு அந்நாட்டின் ராணுவத் தலைமையகம் உத்தவிட்டுள்ளது.

7) ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அனுமதி அளித்துள்ளார்.

English News

1) The Meteorological Department has said that a low pressure area is likely to form in the southwest Bay of Bengal on November 23.

2) The winter session of Parliament is scheduled to begin on November 25.

3) Reports indicate that up to a thousand acres of paddy crops have been damaged in the delta districts due to continuous heavy rains.

4) Air pollution in Delhi has reached the danger level.

5) ISRO's GSAT-20 satellite was successfully launched into space by an American SpaceX rocket.

6) The Sri Lanka military headquarters has urged the Sri Lankan army to withdraw from areas inhabited by Tamils ​​in Sri Lanka.

7) Russian President Vladimir Putin has given permission to use nuclear weapons in the ongoing war between Russia and Ukraine.

No comments:

Post a Comment