அணுவைத் துளைத்த ஔவையின் நுண்மாண் நுழைபுலம்!
கி.மு.
நான்காம் நூற்றாண்டில் டெமாக்ரடீஸ் அணுவைப் பற்றிக் கூறும் போது அது பிரிக்க முடியாத
துகள் என்கிறார்.
கி.பி.
பதினேழாம் நூற்றாண்டில் அணுக்கொள்கையை வெளியிட்ட டால்டனும் அதை உறுதி செய்கிறார்.
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் ரூதர்போர்டு அணுவைப் பிளக்க முடியும் என்று அணுவின் பகுதிப் பொருள்களைப்
புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என விளக்குகிறார்.
தற்காலத்தில்
அணுவை மேலும் மேலும் பிளந்து கடவுள் துகள் வரை கண்டறிந்து விட்டனர்.
இதனுடன்,
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.”
என்ற
ஔவையாரின் இலக்கிய வரிகளைச் சிந்தித்துப் பார்க்கும் போது அவரது ஆழ்ந்த கற்பனையும்,
நுண்மாண் நுழைபுலமும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதுதானே.
*****
No comments:
Post a Comment