பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகத்தில் நவம்பர் 7 முதல் 11 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு
இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2) தீபாவளி பட்டாசுகளால் சென்னை மற்றும் டில்லியில் காற்று
மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பட்டாசு வெடி விபத்துகளால்
304 பேருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
3) அரசு மேனிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணி பதவி உயர்வுக்கான
பட்டியலைத் தயார் செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
4) ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை
விரைவில் அமலுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
5) UPI மூலமாகப் பண பரிவர்த்தனை செய்யப்படுவது அக்டோபர் மாதத்தில்
23.5 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த மாதங்களை விட புதிய உச்சமாகும்.
6) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு
இயக்கப்பட்டு வரும் கப்பல் இனி வாரத்துக்கு ஐந்து நாட்கள் இயக்கப்படும். இதுவரை வாரத்துக்கு
மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்தது.
7) கூகுளுக்குப் போட்டியாக ஓப்பன் ஏஐ தேடுபொறி களத்தில் இறங்கியுள்ளது.
விரைவில் இத்தேடுபொறி இலவச தேடுபொறியாகப் பயனர்களுக்கு வழங்கப்படும்.
English News
1) The Meteorological Department has
informed that there is a possibility of very heavy rain in Tamil Nadu from
November 7 to 11.
2) Diwali crackers increase air pollution
levels in Chennai and Delhi. 304 people have suffered burn injuries due to
firecracker explosion accidents across Tamil Nadu.
3) The Department of School Education has
directed to prepare a list for the promotion of post-graduation teachers in Government
Higher Secondary Schools.
4) Prime Minister Narendra Modi has said
that One Country One Election and Common Civil Code will come into effect soon.
5) Transactions through UPI are 23.5 Lakh
Crore in October. This is a new high over the previous months.
6) The ship operating from Nagapattinam to
Gangesan port in Sri Lanka will now operate five days a week. Until now it was
running three days a week.
7) Open AI has entered the search engine
space to compete with Google. Soon this search engine will be offered to users
as a free search engine.
No comments:
Post a Comment