Tuesday, 12 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 13.11.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

3) பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4) பத்து ரூபாய்க்கு LED பல்புகள் வழங்குவதாகக் கூறி ஆதார் எண் மற்றும் கைரேகைகளைப் பெறும் மோசடி கும்பல்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 10 ரூபாய் LED பல்புகளுக்கு ஆசைப்பட்டு ஆதார் விவரங்களை வழங்கினால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

5) நீர்நிலை ஆக்கிரமிப்பைகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்க முடியாது என உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

6) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7) மதுரா டிராவல்ஸ் நிறுவனர் கலைமாமணி VKT பாலன் உடல்நலக் குறைவால் காலமானார்.

English News

1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi said that measures are being taken to reduce the workload of government school teachers.

2) The new syllabus for the PG Teacher recruitment has been published in the Gazette.

3) The central government has informed that the menstrual hygiene policy for school girls has been formulated and approved.

4) The National Crime Investigation Agency has said to be wary of scammers who claim to offer LED bulbs for ten rupees and obtain Aadhaar numbers and fingerprints. It has also been warned that if you give your Aadhaar details after desiring Rs 10 LED bulbs, you will lose the money in your bank account.

5) The Madurai branch of the High Court has said that no compromise can be accepted in removing encroachments on water bodies.

6) Heavy rain warning has been issued for the districts including Chennai due to the storm symbol formed in the Bay of Bengal.

7) Mathura Travels founder Kalaimamani VKT Balan passed away due to ill health.

No comments:

Post a Comment