Tuesday 5 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 06.11.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) 2036 இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

2) தீபாவளி விடுமுறையை முடித்துக் கொண்டு சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புபவர்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

3) நவம்பர் 14 லிருந்து 20 வரை அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட உள்ளது.

4) மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கவும் பணி புரியவும் உதவும் முதல்வர் படைப்பகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

5) ஜனவரியில் 1000 முதல்வர் மருந்தகங்களைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர் முதல்வர் மருந்தகங்கள் திறக்க விண்ணப்பிக்கலாம்.

6) பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

7) பெண் சாதனையாளர்கள் பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்று மக்களுடன் குடியரசுத் தலைவர் நிகழ்வில் திரௌபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

8) பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு கேரளா, பஞ்சாப், உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் நவம்பர் 20க்கு மாற்றியுள்ளது.

English News

1) India has expressed interest in hosting the Olympics in 2036.

2) There is heavy traffic jam in Chennai due to people returning from their hometowns after Diwali vacation.

3) All India Co-operative Week will be celebrated from 14th to 20th November.

4) Chief Minister of Tamil Nadu M.K.Stalin inaugurated Chief Minister's Institute to help study and work at very low cost.

5) Government of Tamil Nadu plans to open 1000 CM Dispensaries in January. Interested person can apply to open CM dispensaries.

6) According to the health department, the incidence of Madras eye disease is high in Chennai due to climate change.

7) Draupadi Murmu appealed to women achievers to mentor others in the President's event with the people.

8) The Election Commission has shifted the assembly by-elections in Kerala, Punjab and Uttar Pradesh to November 20 in view of festivals.

No comments:

Post a Comment