பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா முதலிடத்தில்
உள்ளது. இரண்டாமிடத்தில் மிசோராமும், மூன்றாமிடத்தில் டெல்லியும் உள்ளது. பீகார் கடைசி
இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
3) நவம்பர் 25 மற்றும் 26 இல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4) திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி மதிப்பிலான
டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
5) மேக வெடிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில்
41 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.
6) மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகளும்,
ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 68 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
7) கடந்த மாதங்களில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்த இந்திய
தொழிழகத் துறை செப்டம்பர் மாத்த்தில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
8) தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முறைகேடான வழிகளைப் பின்பற்றியதாக
அமெரிக்க நீதிமன்றம் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனால் அதானி நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
9) ஆசிய மகளிர் ஹாக்கிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா
வெற்றிக் கோப்பையைத் தக்க வைத்தது.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi has said that job security of teachers in schools will be ensured.
2) Kerala is at the top of the literate
states in India. Mizoram is at the second place and Delhi is at the third
place. Bihar is at the last place. Tamil Nadu is at the ninth place.
3) The Meteorological Department has said
that there is a possibility of heavy rain in Tamil Nadu on November 25 and 26.
4) Chief Minister M.K. Stalin will
inaugurate the Rs 330 crore Tidal Park in Pattabhiram, Tiruvallur district
today.
5) Due to cloudburst, Rameswaram in
Ramanathapuram district received 41 cm of rain.
6) 65 percent voting was recorded in the
Maharashtra Assembly elections and 68 percent voting was recorded in the
Jharkhand Assembly elections.
7) The Indian industrial sector, which had
recorded negative growth in the past months, returned to growth in September.
8) A US court has issued an arrest warrant
for Indian industrialist Gautam Adani for allegedly using illegal methods to
attract industrial investments. As a result, Adani's shares have fallen sharply
in the stock market.
9) India defeated China in the Asian Women's
Hockey Championship to retain the victory trophy.
No comments:
Post a Comment