பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம்
மற்றும் வேளாங்கண்ணியில் 35 செ.மீ. மழையும், வேதாரண்யத்தில் 20 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
2) தமிழக விரைவுப் பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு
செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3) பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க
நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
4) 1500 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கும் ஹைபர்சோனிக்
ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
5) பிரதமர் நரேந்திரமோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருதான கிராண்ட்
கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.
6) இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்
கொண்டார்.
7) உலகக் கோப்பை கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த காசிமா
முதலிடம் பிடித்தார்.
8) மெக்சிகோவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் டென்மார்க்கின்
விக்டோரியா கியார் தில்விக் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
English News
1) Heavy rains are falling in the Delta
districts. Nagapattinam and Velankanni received 35 cm rain and Vedaranyam
received 20 cm rain.
2) 90-day advance booking facility has been
introduced in Tamil Nadu express buses.
3) Deadline for applying for the Prime
Minister's Crop Insurance Scheme has been extended till November 30.
4) India has successfully tested a
hypersonic missile with a range of 1500 km.
5) Prime Minister Narendra Modi has been
awarded Nigeria's highest civilian award, the Grand Commander of the Order of
the Niger.
6) Harini Amarasooriya has taken oath as the
new Prime Minister of Sri Lanka.
7) Kasima from Chennai came first in the
World Cup Carrom tournament.
8) Denmark's Victoria Kieran Dilvik was
crowned Miss Universe at the Miss Universe pageant held in Mexico.
No comments:
Post a Comment