Sunday, 24 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 25.11.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து வேலூரில் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இவ்வாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

2) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

3) வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4) கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

5) அரசுப் பேருந்துகளில் தினமும் 57 லட்சம் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

6) மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

7) ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

8) வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்று பெற்றுள்ளார்.

9) ஒரு சவரன் தங்கம் விலை 57000 ரூபாயைக் கடந்தது.

English News

1) A review meeting on school education activities is to be held in Vellore on November 28 and 29.

The review meeting will be chaired by School Education Minister Anbil Mahesh Poyyamozhi.

2) The Central Government has decided to introduce 16 bills in the winter session of Parliament.

3) A new cyclone has formed in the Bay of Bengal.

Due to this, the Meteorological Department has said that there is a possibility of heavy rain for three days from today.

4) The Tamil Nadu government has said that precautionary measures have been taken to face heavy rain.

5) The Tamil Nadu government has said that 57 lakh women travel free of cost in government buses every day.

6) The Bharatiya Janata Party has won the Maharashtra Assembly elections.

7) The Congress has won in Jharkhand.

8) Priyanka Gandhi has won the Wayanad Lok Sabha by-election.

9) The price of a sovereign of gold crossed 57,000 rupees.

No comments:

Post a Comment