Monday, 4 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 05.11.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை நவம்பர் 11 லிருந்து 20க்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2) நவம்பர் 10 இல் நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தேர்வை தமிழகத்தில் ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர்.

3) வடகிழக்குப் பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4) பருவநிலை மாற்றத்தால் இந்தியா தனது ஜிடிபியில் 25 சதவீதத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

5) சூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் வீடுகளின் விற்பனை முக்கிய நகரங்களில் 13 சதவீதம் குறைந்துள்ளது.

6) தங்கள் நாட்டுக்கு இணையவழி அச்சுறுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்துள்ளது கனடா.

7) இன்று அமெரிக்க தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. புதிய அதிபர் ஜனவரி 20 இல் பதவியேற்பார்.

English News

1) The school education department has ordered to conduct the district level art festival competitions between November 11 to 20.

2) Five lakh people in Tamil Nadu are appearing for the New Bharat Literacy Scheme exam to be held on November 10.

3) Health Minister M. Subramanian has said that the medical camps will continue till the end of the North East Monsoon.

4) The Asian Development Bank predicts that India is at risk of losing 25 percent of its GDP due to climate change.

5) Home sales fell by 13 percent in major cities during the July-September period.

6) Canada has included India in the list of countries that pose an e-commerce threat to their country.

7) The US election is taking place today. Votes are counted tomorrow. The new president will take office on January 20.

No comments:

Post a Comment