Friday, 8 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 09.11.2024 (சனி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தென்மேற்கு வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் நவம்பர் 13 வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) 90 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்பட உள்ளது.

3) சிம் கார்டு இல்லாமல் பேசும் D2D முதல் கட்ட சோதனையை BSNL நிறுவனம் வெற்றிகரமாக முடித்துள்ளது.

4) அரசு பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு விதிமுறைகளை மாற்றம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5) நவம்பர் 15 லிருந்து ஜனவரி 16 வரை சபரி மலைக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு பேருந்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

6) பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பயணிகளுக்கான விரைவு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

7) உச்சநீதி மன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

8) நெட் தகுதித் தேர்வில் ஆயுர்வேத உயிரியல் பாடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

9) பாலியல் துன்புறுத்தல் வழக்கை சமரசம் காரணமாகக் கைவிடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10) பிரேசிலில் இருந்து உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதியை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

11) 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

English News

1) Heavy rains will continue in Tamil Nadu till November 13 due to the formation of low pressure zone in Southwest Bay of Bengal.

2) After 90 years, Mettur Dam is going to be deepened.

3) BSNL has successfully completed first phase trial of D2D talk without SIM card.

4) The Supreme Court has ruled that the rules cannot be changed after the selection process for government jobs has started.

5) Tamil Nadu Government Bus Corporation has decided to run special buses to Sabari Hill from November 15 to January 16.

6) Trial run of passenger express train at Pampan new railway bridge.

7) The 50th Chief Justice of the Supreme Court Chandrachud retired yesterday.

8) Newly added Ayurvedic Biology subject in NET qualifying exam.

9) Supreme Court said that sexual harassment case should not be dropped due to compromise.

10) India has decided to increase imports of Black gram and Pulses from Brazil.

11) The Australian government has decided to ban children under the age of 16 from using social media.

No comments:

Post a Comment