Wednesday 31 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 01.08.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதல்வர் ஆகஸ்ட் 8 இல் கோவையில் தொடங்கி வைக்கிறார்.

2)                  மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 56 ஏரிகளுக்கு நிரப்பப்படுகிறது.

3)                  மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளியேற்றப்படும் நீர் 1.7 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

4)                  காவிரி, கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5)                  வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

6)                  வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிரதமருக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

7)                  மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்சனைகள் ஏற்பட்டதால் உலகெங்கும் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

8)                  புதுச்சேரி மாநில பட்ஜெட் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

9)                  அமர்நாத்துக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 4.7 லட்சத்தைக் கடந்துள்ளது.

10)              பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டனில் பி.வி. சிந்து, லக்சயா சென் அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 English News

1) The Chief Minister will inaugurate the Tamil Puthulavan scheme on August 8 in Coimbatore.

2) Surplus water from Mettur dam is fed to 56 lakes.

3) As the water inflow to Mettur Dam continues to increase, the discharge has been increased to 1.7 lakh cubic feet.

4) A flood warning has been issued to the people along the banks of Cauvery and Kollidam river.

5) The death toll in Wayanad landslides has increased to 270.

6) Russian President Vladimir Putin has sent a condolence message to the Prime Minister condoling the victims of the Wayanad landslide.

7) Users around the world were affected for 10 hours due to recurring problems with Microsoft's operating system.

8) Puducherry State Budget begins today with Governor's speech.

9) The number of devotees visiting Amarnath has crossed 4.7 lakhs.

10) PV Sindhu and Laxaya Sen advanced to the next round in Badminton in Paris Olympics.

Tuesday 30 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 31.07.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  ஆகஸ்ட் 14 முதல் மருத்துவ கலந்தாய்வு துவங்குகிறது.

2)                  தமிழகத்தில் டிசம்பருக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்க உள்ளன.

3)                  கேரளா, வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.

4)                  வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து இன்றும் நாளையும் கேரளத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

5)                  கேரளத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

6)                  கேரள நிலச்சரிவு நிவாரணமாகத் தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி வழங்கப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

7)                  ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற சாதனையைப் படைத்தார் மனு பாக்கர். ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றனர்.

8)                  43வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

9)                  உலக நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை ஒளியாகத் திகழ்வதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக முதலீடுகளின் மையமாகவும் இந்தியா திகழ்வதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

10)              திருத்தப்பட்ட BIS விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருதால் காலணிகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

11)              பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி கால் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

 English News

1) MBBS Medical counselling starts from 14th August.

2) Arrangements are being made to hold rural local body elections in Tamil Nadu by December. Rural local body elections are scheduled to be held on December 27 and 30.

3) More than a hundred people have been killed in landslides caused by heavy rains in Wayanad, Kerala. The death toll has risen to 135.

4) Mourning is observed in Kerala today and tomorrow following the loss of lives in the Wayanad landslides.

5) Landslides have also occurred in Karnataka after Kerala. The National Disaster Response Force has rushed there.

6) The Chief Minister of Tamil Nadu has announced that five crores will be provided by the Government of Tamil Nadu as Kerala landslide relief.

7) Manu Bakar holds the record of winning two medals in a single Olympics. Manu Bakar and Sarabjot Singh won bronze in air pistol mixed team category.

8) For the 43rd time Mettur Dam reached its full capacity of 120 feet.

9) The Prime Minister proudly expressed that India is a beacon of hope for the world. The Prime Minister said that India is also the center of global investments.

10) Prices of footwear are likely to rise as revised BIS norms come into effect from 1st August.

11) The Indian hockey team has qualified for the quarter-finals of the ongoing Olympics in Paris.

Monday 29 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 30.07.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 55 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2)                  மேட்டூர் அணையிலிருந்து 20000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3)                  19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

4)                  ஏர்டெல் நிறுவனத்தை விட கட்டணத்தைக் குறைத்தது ஜியோ.

5)                  வெனிசுலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றுள்ளார்.

6)                   நமீபியாவிற்கு 1000 மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

7)                  சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.

8)                  ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் நாடு தழுவிய விடுமுறை விடப்பட்டுள்ளது.

9)                  ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்க வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார் இந்திய வீரர் அர்ச்சுன் பாபுதா.

10)              இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1.4 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 English News

1) Tamil Nadu has received 55 percent more than normal southwest monsoon rains, according to the Meteorological Department.

2) Due to release of 20000 cubic feet of water from Mettur dam, flood alert has been issued for 11 districts.

3) CM inaugurated 19 Panchayat Union office buildings through video conference.

4) Jio lowers tariff than Airtel.

5) Nicolás Maduro has won the Venezuelan presidential election.

6) The central government has allowed the export of 1000 MT of rice to Namibia.

7) Heavy rains and landslides kill 15 people in China.

8) A nationwide holiday has been announced due to a severe heat wave in Iran.

9) Indian athlete Arjun Babuta narrowly missed out on a medal in Olympic shooting.

10) The central government has said that the number of start-up companies in India has crossed 1.4 lakh.

Sunday 28 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.07.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் மனு பாக்கர்.

2)                  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு சூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

3)                  ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சூலை 28 லிருந்து ஆகஸ்ட் 3 வரை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது.

4)                  ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5)                  மேட்டூர் அணையின் நீர் மட்டம் 71 வது முறையாக 100 அடியைக் கடந்தது. அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்குகிறது.

6)                  பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்றது சீனா.

7)                  புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே. கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

8)                  சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9)                  தமிழகத்திற்கு அடுத்து வரும் 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10)              மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 English News

1) Manu Bakar won India's first Olympic medal by winning a bronze medal in shooting.

2) Apply for Masters Degree Courses in Government Arts and Science Colleges from July 27 to August 7.

3) Water is released from Mettur Dam from July 28 to August 3 on the occasion of Adiperukku Festival.

4) Cauvery water coming to Okanakkal has increased to one lakh cubic feet. Due to this, a flood warning has been issued for the Cauvery coastal areas.

5) Mettur dam water level crosses 100 feet for the 71st time. The water level of the dam approaches 110 feet.

6) China won the first gold at the Paris Olympics.

7) K. Kailashnathan has been appointed as Lt Governor of Puducherry.

8) C.P. Radhakrishnan has been appointed as the Governor of Maharashtra.

9) Tamil Nadu is likely to receive rain for the next 7 days, according to the Meteorological Department.

10) Sri Lanka won the women's Asia Cup T20 cricket series.

NMMS – SAT – சமூக அறிவியல் – பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு –  பொருளியல் – பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு – பொருளியல் – பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – சமூக அறிவியல் - அரசியல் கட்சிகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு –  குடிமையியல் – அரசியல் கட்சிகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு – குடிமையியல் – அரசியல் கட்சிகள் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – அறிவியல் – நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – அறிவியல் – ஏழாம் & எட்டாம் வகுப்பு –  வேதியியல் – நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – அறிவியல் – ஏழாம் & எட்டாம் வகுப்பு – வேதியியல் – நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – கணக்கு – எட்டாம் வகுப்பு – அளவைகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – கணக்கு – எட்டாம் வகுப்பு –  அளவைகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – கணக்கு – எட்டாம் வகுப்பு – அளவைகள் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – MAT – எண்தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – MAT – எண்தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – MAT – எண்தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – MAT – எண்தொடரை நிரப்புதல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – MAT – எண்தொடரை நிரப்புதல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – MAT – எண்தொடரை நிரப்புதல் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Saturday 27 July 2024

ஏன் நீங்கள் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறீர்கள்?

சிறந்த வேலை நாள் என்பது அதிகமாக வேலைபார்ப்பது இல்லை. சரியான அளவில் வேலை பார்ப்பதே.

ஏன் நாம் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறோம்?

இயல்பாகவே மனிதர்களுக்கு அதிக வேலை பார்ப்பதில் ஈடுபாடு இருக்கும். நிறுவனங்களுக்கோ அதிக வேலை வாங்குவதில் ஈடுபாடு இருக்கும்.

எந்த அளவுக்கு அதிக வேலை பார்க்கிறோமோ அந்த அளவுக்குப் பின்னாட்களில் கொந்தளிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன.

அதிகமாக வேலை பார்ப்பதால் நம்மை அறியாமல் பரபரப்பு, பதற்றம் போன்வற்றிற்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஏன்? இது எப்படி நிகழ்கிறது?

பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனர் என்பது தெரியாமலேயே இருக்கின்றனர். இதனால் அவர்கள் காரணமின்றிப் பரபரப்பாக இருக்கின்றனர்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். அப்படித் தெளிவாக இருக்கும் போது, எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்குத் தேவையான விசயம் உங்கள் கண்களுக்குத் தெளிவாகத் தென்படும். அப்படித் தென்படும் போது அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்திச் சரியாகச் செயல்படுவீர்கள்.

தெளிவாக இருக்கும் போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அதிக தெளிவும், அன்றாட பகட்டுகள் மற்றும் பரபரப்புகளுக்கு முன்னுரிமை தராமல் இருப்பதற்கும் பழகிக் கொள்வீர்கள்.

இதனால் எதில் கவனம் செலுத்தி எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புலப்படும். நீங்கள் சரியான அளவில் வேலை செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலையும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.

Friday 26 July 2024

சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச் சிதறலைக் குறைத்துக் கொள்வது எப்படி?

கவனச் சிதறல் என்பது ஹேக்ஸ்பியரிலிருந்து செனகா வரை எல்லாருக்கும் இருந்தது. அந்தக் காலத்தில் கவனத்துக்கு இடையே கவனச் சிதறல் இருந்தது. இன்றோ கவனச் சிதறல்களுக்கு இடையே எப்போதாவது கவனம் செலுத்த முடிகிறது.

தற்காலத்தில் கவனச் சிதறல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மின்னணு சாதனங்கள். அதிலும் முக்கியமாக இருப்பது அலைபேசி. அதில் முக்கியமாக இருப்பது சமூக ஊடகங்கள். அடிக்கடி சமூக ஊடகங்களைத் திறந்து பார்ப்பதும், அதில் எதையாவது செய்து கொண்டிருப்பதும், செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதும், செய்திகள் ஏதேனும் வந்திருக்கிறதா எனத் தவிப்போடு இருப்பதும் நம்முடைய கவனச் சிதறலை வெகுவாக அதிகரித்து விட்டன.

ஒரு காலத்தில் அப்போது மின்னஞ்சலைத் திறந்து பார்ப்பதே ஆர்வமான ஒரு செயல். பிற்பாடு சமூக ஊடகங்கள் வந்த போது அந்த இடத்தை முகநூலும், கீச்சும் (பேஸ்புக்கும் டிவிட்டரும் (தற்போது எக்ஸ்)) பிடித்துக் கொண்டன. புலனம் எனும் வாட்ஸ்ஆப் வந்த பிறகு அந்த இடத்தை வாட்ஸ்ஆப் பிடித்துக் கொண்டது. இப்போது மின்னஞ்சலை அடிக்கடி திறந்து பார்ப்பவர்கள் குறைவு. வாட்ஸ்ஆப்பை அடிக்கடி திறந்து பார்ப்பவர்கள்தான் அதிகம். இப்படி கவனச்சிதறலை உண்டாக்கும் ஏதேனும் ஒன்று காலத்திற்கேற்ப வந்து கொண்டுதான் இருக்கின்றன, இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது.

முகநூலோ, புலனமோ அடிக்கடி என்னைத் திறந்து பாருங்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் அப்படி ஒரு கட்டுபாட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள்.

இதை எப்படித் தவிர்ப்பது?

முகநூல், புலனம் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் போட்டுத் திறந்து உள்ளே செல்லும் வகையில் அமைத்துக் கொள்வது ஒரு நல்ல வழி. அந்தக் கடவுச்சொல்லையும் எளிதில் நினைவில் கொள்ள முடியாதபடி கடினமான கடவுச்சொல்லாக அல்லது தட்டச்சுச் செய்வதற்குக் கடினமான கடவுச் சொல்லாக அமைத்துக் கொள்வது நல்லது. இதனால் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் போட்டு உள்ளே செல்லும் கடினத்திற்காகவே அதை அடிக்கடி திறந்து பார்க்க மாட்டீர்கள்.

அலைபேசியை இணைய இணைப்பிலேயே வைக்காமல் அதை அணைத்து விடுவது மூலமாக அவற்றில் செய்தி வந்ததற்கான சமிக்ஞைகள் அதாவது நோட்டிபிகேஷன் கிடைக்காமல் அடிக்கடி நீங்கள் அதை திறந்து பார்ப்பது குறையும். இதுவும் ஒரு வழிமுறைதான் அல்லவா?

முக்கியமான வேலை பார்க்கும் போது அலைபேசிக்கும் உங்களுக்கும் சில மீட்டர் இடைவெளி இருப்பது நல்லதுதானே? அல்லது அலைபேசியை அணைத்து வைத்து விடுவது மிகவும் நல்லதுதானே? இதனால் அடிக்கடி உங்களுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச்சிதறலைக் குறைத்துக் கொள்ளவும் தடுத்துக் கொள்ளவும் முடியும் அல்லவா!

Thursday 25 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 26.07.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  இன்று பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்குகின்றன. இந்தியா சார்பில் 16 போட்டிகளில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

2)                  இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகின்றன.

3)                  ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச்  சேர்ந்த 10741 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

4)                  தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்தைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியைக் கடந்தது.

5)                  கர்நாடாகவில் பெய்து வரும் கன மழையால் காவிரியில் திறக்கப்படும் திறக்கப்படும் தண்ணீர் ஒரு லட்சம் கன அடியைக் கடந்தது.

6)                  நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

7)                  கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

8)                  நீட் தேர்வுக்கு எதிராகக் கர்நாடக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9)                  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10)              பரந்தூர் விமான நிலைய கட்டுமானம் 2026 ஜனவரியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 English News

1) The 33rd Olympic Games kicks off with a bang today in Paris. 117 athletes will participate in 16 events on behalf of India.

2) The Olympic Games, which begin today, will continue till August 11.

3) 10741 athletes from 206 countries participate in the Olympic Games.

4) Mettur Dam's water level has crossed 90 feet due to continuously increasing water flow.

5) Due to heavy rains in Karnataka, the release of water in Cauvery crossed one lakh cubic feet.

6) An ordinance has been issued to allocate 360 ​​crore rupees for the Tamil Puthalavan scheme for the students studying in government schools and pursuing higher education in the current academic year.

7) The Supreme Court has ruled that the state governments have the power to levy taxes on mineral resources.

8) Resolution passed in Karnataka Legislature against NEET exam.

9) So far 36 people have been arrested in connection with NEET examination malpractice.

10) It is reported that the construction of Parantur Airport will start in January 2026.