Saturday 31 August 2024

பூவின் வளர்பருவங்கள்!

பூவின் வளர்பருவங்கள்!

பூவை மலர், அலர், மொட்டு போன்ற பெயர்களால் நாம் அறிவோம். இவை அனைத்தும் பூவின் வளர்பருவங்களைக் குறிக்கும் சொற்கள்.

பூவின் பல்வேறு பருவங்கள்தான் என்ன?

பூவின் வளர்பருவங்கள் குறித்த செய்தியைத் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’ என்ற நூல் பின்வருமாறு பதிவு செய்கிறது.

பூவின் வளர்பருவங்கள் ஏழாக அறியப்படுகின்றன.

நனை என்பது பூவின் முதல் பருவம். இது பிறப்புப் பருவம்.

அரும்பு என்பது பூவின் இரண்டாவது பருவம்.

முகை என்பது பூவின் மூன்றாவது பருவம்.  பூவின் மணம் வெளிப்படும் பருவம் இதுவாகும்.

போது என்பது பூவின் நான்காவது பருவம். அதாவது முகை திறக்கும் நிலை போது.

மலர் என்பது பூவின் ஐந்தாவது பருவம். பூ விரிந்து காணப்படும் நிலை இதுவாகும்.

அலர் என்பது பூவின் ஆறாவது பருவம். மகரந்த சேர்க்கையும் கருவுறுதலும் நடக்கும் பருவம் இதுவாகும்.

வீ என்பது பூவின் ஏழாவது பருவம். பூக்காம்பிலிருந்து பூ கழன்று விழும் பருவம் இதுவாகும்.

எனினும் இந்த ஏழு நிலைகளும் அனைத்துப் பூக்களிலும் காணப்பட வேண்டும் என்பதில்லை. ஒரு சில பருவங்கள் இல்லாமலும் இருக்கலாம்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் பூவின் பருவங்களுக்குப் பின்வரும் பட விளக்கம் உள்ளது.

ஒப்பீட்டு அளவில் இவ்விரண்டும் சில இடங்களில் மாறுபட்டாலும் தமிழின் வளமையை அறியும் போது வியக்காமல் இருக்க முடியாது.

*****

UPSC தேர்வுகள் அட்டவணை : 2024 – 2025

UPSC தேர்வுகள் அட்டவணை : 2024 – 2025

2024 – 2025 ஆம் ஆண்டிற்கான UPSC தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகுபவர்கள் இந்த அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ளவும். தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து உதவவும்.


Friday 30 August 2024

பணக்கார சூட்சமங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒருவர் பணக்காரராகச் சம்பாத்தியம் மட்டும் முக்கியமில்லை. அவர் சம்பாத்தியத்தில் எவ்வளவு சேமிக்கிறார் என்பதும் முக்கியம். இதுவே பணக்காரர் ஆவதில் உள்ள முக்கிய சூட்சமம்.

பணக்காரராகச் சேமிக்க வேண்டும். சேமித்ததை லாபகரமாக முதலீடு செய்ய வேண்டும்.

அத்துடன் பணக்காரர்களின் மேலும் சில சூட்சமங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் முதலீட்டில் துணிந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதிக வருமானத்திற்கு முதலீட்டில் கணிப்பின் அடிப்படையில் துணிகர முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

பணக்காரர்களின் குணாதிசயம் என்று ஒன்று இருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்போது ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறதோ அப்போது அந்தப் பொருளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிப் போட்டு விட்டு, சரியான விலை கிடைக்கும் வரை நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பங்குச்சந்தையைப் பொருத்த வரையில் நேரம் பார்த்து முதலீடு செய்வதை விட, முதலீடு செய்து விட்டு நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்.

பணக்காரர்களின் மேலும் சில குணாதிசயங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இலக்குகளை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். மனதில் நினைப்பதை விட எழுதி வைத்துக் கொண்டு, திரும்ப திரும்ப பார்க்கும் போது அவர்களுடைய இலக்கும் பயணமும் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

பணக்காரர்களின் செயல் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றுள் முக்கியமான ஒன்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் வழக்கறிஞர், தணிக்கையாளர், நிதி ஆலோசகர் ஆகிய மூவரைத் தங்களுடைய நண்பர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொத்து எதையாவது வாங்க வேண்டும் என்றால் இந்த மூவரிடம் ஆலோசனை கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். ஆலோசனைகள் பெற்று, சொத்து வாங்குவதால் பல தலைமுறைகளுக்குச் சிக்கல் இல்லாத சொத்துகளை அவர்கள் உருவாக்குவார்கள்.

இந்த விசயம் உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் பணக்காரர்கள் இந்தச் சின்னஞ்சிறு விசயத்திலும் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள். அது என்னவென்று கேட்கிறீர்களா?

பணக்காரர்கள் வெளியில் அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது, பணச் சேமிப்பும் கிடைக்கிறது.

அப்படியானால் பணக்காரர்களும் ஏழைகளும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்கிறீர்களா? சந்தேகமே இல்லாமல் நாம் முதலில் பார்த்த அதே இடம்தான். அதாவது சேமிப்புதான்.

பணக்காரர்கள் மிச்சமாகும் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஏழைகள் சம்பாதிக்கும் காலத்தில் தேவையில்லாத செலவுகளைச் செய்துவிட்டு பணி ஓய்வுக்குப் பின் கஷ்டப்படுகிறார்கள். பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆகவே நீங்கள் நினைத்தால் பணக்காரர் ஆகலாம். நீங்கள் நினைத்தால் பணக்கார நிலையிலிருந்து ஏழையாகவும் ஆகலாம். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒருவர் தன் வருமானத்தில் பத்து சதவீத தொகையைச் சேமித்தாலே ராஜா போல வாழலாம். பிறகென்ன சேமிக்கத் தொடங்குங்கள். சேமித்த தொகையை லாபகரமாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். பணக்காரர் ஆகுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

Thursday 29 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 30.08.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களைத் தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

2)                  வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

3)                  இரண்டாமாண்டு பி.எட். படிப்பிற்கான நான்காம் பருவ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் வினாத்தாளைத் திரும்ப பெற்றது உயர்கல்வித் துறை. பல்கலைக்கழகப் பதிவாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

4)                  இந்த ஆண்டின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா என்ற பெயர் இடப்படும்.

5)                  நாளை உத்திர பிரதேசத்தில் 11வது வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

6)                  இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

7)                  இந்தியா பணக்காரர்களில் முதலிடத்தைக் கௌதம் அதானி பிடித்தார்.

8)                  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் எண் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

9)                  உலகளவில் இருக்கும் சமூக இடங்களில் பேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது. யூடியூப் இரண்டாம் இடத்திலும், வாட்ஸ் ஆப் மூன்றாமிடத்திலும் உள்ளது.

10)              ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பகத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

1) Students can get the original 10th class mark certificates from the schools they attended.

2) Velankanni Cathedral Anniversary started yesterday with flag hoisting.

3) The higher education department has taken back the question paper in the issue of leakage of the fourth term question paper for the course second year B.Ed. The university registrar has been sacked.

4) Meteorological Department has said that the second storm of this year is likely to form. The storm will be named Asna by Pakistan.

5) Prime Minister will inaugurate the 11th Vande Bharat train in Uttar Pradesh tomorrow.

6) Defense Minister Rajnath Singh dedicated the second nuclear powered submarine to the country.

7) Gautham Adani took the first place among the richest people in India.

8) Devasthanam said that Aadhaar number is mandatory to buy Latdu Prasad at Tirupati Ezhumalayan Temple.

9) Facebook is the number one social site in the world. YouTube is second and WhatsApp is third.

10) Reliance Jio has announced to offer 100 GB free cloud storage to its users.

SMC மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள்!

SMC மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள்!

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்களைப் பெற தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

1. அழைப்பிதழ் (Invitation)

 Click Here to Download

2. குழு உறுப்பினர் விவரம் (Members List)

 Click Here to Download

3. மறுகட்டமைப்புக்கான படிவங்கள் (Reconstitution Forms)

 Click Here to Download

4. சான்றிதழ் படிவம் (Certificate)

 Click Here to Download

5. உறுதிமொழி படிவம் (Pledge)

 Click Here to Download

6. பார்வையாளர் படிவம் (Observer Form)

 Click Here to Download

தேவையானப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து பயன் பெறவும். மற்றவர்களும் பயன் பெற தேவையானவர்களுக்குப் பகிரவும்.

*****

Wednesday 28 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.08.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  தேசிய நல்லாசிரியர் விருதுக்கு மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் முரளிதரன், வேலூர், ராஜகுப்பம் பள்ளியின் கோபிநாத் தேர்வாகியுள்ளனர்.

2)                  தமிழகத்தில் ஆறு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3)                  தமிழகம் உட்பட நாடு முழுவதும் 730 பண்பலை வானொலிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

4)                  அங்காடிகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்வதற்கான திட்டம் தொடங்க உள்ளது.

5)                  சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமான கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

6)                  இராணுவத்துக்குத் தேவையான 73000 துப்பாக்கிகள் வாங்க இந்தியா அமெரிக்காவுடன் 873 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

7)                  பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.

1) Madurai, TVS Higher Secondary School teacher Muralitharan and Vellore, Rajakuppam School Gopinath have been selected for National level best teacher award.

2) Meteorological Department has said that widespread rain is likely to occur in Tamil Nadu for six days.

3) Approval has been given to 730 FM radio stations across the country including Tamil Nadu.

4) Plan to start selling Aavins's products in ration shops.

5) Scientists have discovered a black hole 500 trillion times brighter than the Sun.

6) India has signed an agreement with the US for 873 crores to buy 73000 guns for the army.

7) Sunita Williams will return to Earth in February, says NASA.

Tuesday 27 August 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 28.08.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை அறிய ‘கூட்டுறவு’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2)                  2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைவோம் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

3)                  ஆதார் விவரங்களைக் கட்டணமின்றி புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

4)                  பி.எம். ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால் தமிழகத்திற்கான மத்திய அரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

5)                  சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் தலைவராக ஜெய்ஷா தேர்வு சேய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார்.

6)                  20000 கோடி கடனைக் கட்டிய டாடா சன்ஸ் நிறுவனம் கடனில்லாத நிறுவனமாக ஆகியுள்ளது.

7)                  தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக பாஸ்போர்ட்டுக்கான இணையதளம் மூன்று நாட்கள் தற்காலிகமாக இயங்காது.

8)                  சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதித்தது கனடா.

9)                  செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளன.

10)              பாரா ஒலிம்பிக் போட்டி இன்று பாரிசில் தொடங்குகிறது.

1) An app called 'Kootturavu' has been introduced to know the services of Cooperative Societies.

2) The chief minister expressed hope that Tamilnadu will achieve the economic goal of one trillion dollars by 2030.

3) Time has been given till 14th September to update Aadhaar details free of cost.

4) The central government's education fund for Tamil Nadu has been stopped due to non-adherence to PM Sri school scheme.

5) Jaysha has been selected as the president of the International Cricket Council. He is the son of Union Home Minister Amit Shah.

6) Tata Sons has become a debt-free company after incurring a debt of 20,000 crores.

7) Website for Passport will be temporarily down for three days due to technical development works.

8) Canada imposes 100 percent tariff on Chinese electric vehicles.

9) There are 15 bank holidays in September.

10) Paralympics starts today in Paris.

Monday 26 August 2024

பணத்திற்கு அடிப்படை எது தெரியுமா?

Basic of the money!

பணத்தைக் காகித வடிவில் அச்சடிக்கிறோம். காகிதத்திற்குப் பஞ்சமில்லை. அதனால் இருக்கின்ற காகிதங்களில் எல்லாம் பணத்தை அச்சடித்து விட முடியுமா? அதுதான் முடியாது.

பணத்தை அச்சடிப்பதற்கான பொருளாதார அடிப்படை ஒன்று இருக்கிறது. அதுதான் தங்கம். தங்கத்தின் கையிருப்பைப் பொருத்தே ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் பணத்தை அச்சடிக்கும். இதைத்தான் Gold Exchange Standard என்கிறார்கள்.

உலக நாடுகள் இந்தப் பொதுவான முறையை ஏற்றுக் கொண்டுதான் பணத்தை அச்சடிக்கின்றன. இதை மீறி அச்சடிக்க முடியுமா என்றால் அது ஒவ்வொரு நாடும் எடுக்கும் முடிவைப் பொருத்தது. அப்படி அச்சடித்தால் என்னவாகும் தெரியுமா? பணவீக்கம் ஏற்படும்.

Gold Exchange Standard ஐ மீறாமல் இருப்பதே ஒவ்வொரு நாட்டின் பொருளாதரத்திற்கும் நல்லது. அப்படியானால் இதை எந்த நாடு மீறும்? எந்த நாடும் மீறாதுதான். அதை மீறும் போதுதான் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக இந்தப் பொருளாதார அடிப்படையை 1971 இல் அமெரிக்கா மீறியது. இப்போதும் மீறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் பல நேரங்களில் ஆட்டம் காண்பது இதனால்தான்.

இப்போது அமெரிக்கா அச்சடிக்கும் பண மதிப்புக்கும் அதனிடம் இருக்கும் தங்க மதிப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அமெரிக்கா தேவைக்கதிகமாகவே பண மதிப்பைக் காகித வடிவில் அதாவது டாலர் நோட்டுகளாக அச்சடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இந்தச் செய்கையால் அந்த நாட்டின் கடன் ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. உலகின் பணக்கார நாடு அமெரிக்கா என்று சொல்லும் அதே வேளையில் உலகின் முதன்மையான கடன்கார நாடும் அதுவாகவே இருப்பது ஒரு பெரிய முரண் அல்லவா. இந்த முரண் Gold Exchange Standard ஐ மீறியதால் ஏற்பட்ட விளைவு.

அமெரிக்கா நீண்ட நாட்கள் இப்படி செய்து கொண்டிருக்க முடியாது. அதாவது தன்னிடம் இருக்கும் தங்க மதிப்பைத் தாண்டி, பணத்தை அச்சடித்துக் கொண்டிருக்க முடியாது. அதன் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்தால் மீண்டும் அது தங்கத்தின் இருப்பிற்குத் தகுந்தாற் போல பணத்தை அச்சடிக்க வேண்டிய கட்டுபாடான நிலைமை ஏற்படும். அப்போது தங்கத்தின் மதிப்பு ஏகத்திற்கு எகிறும்.

இதனால்தான் உண்மையான பணம் என்பது தங்கம் எனப்படுகிறது. தங்கத்திற்கு நிகரான காகிதப் பணமே நாம் பயன்படுத்தும் அரசாங்க பணம். அந்தப் பணத்திற்கு உரிய மதிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்றால் Gold Exchange Standard ஐ ஒரு நாட்டின் அரசாங்கம் மீறாமல் இருக்க வேண்டும்.

ஆனால் பணத்தின் மதிப்பு மேலே ஏறினாலும், கீழே சறுக்கினாலும் சரி, தங்கத்தின் மதிப்பு நிலையானது. ஏனென்றால் அதுவே எப்போதும் உண்மையான பணம். அதுவே பணத்திற்கு அடிப்படை. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே பணத்தின் அடிப்படை எது என்று. தங்கம்தான் அந்த அடிப்படை. பொருளாதாரத்தின் மாறாத அடிப்படை அலகு அதுவே.

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 27.08.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  ஆகஸ்ட் 29 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2)                  செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்கிறது.

3)                  முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் நாளை அமெரிக்கா செல்கிறார்.

4)                  தமிழகத்தில் குரங்கு அம்மை அறிகுறி இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

5)                  பூண்டு மற்றும் வெங்காய விலை உயரத் தொடங்கியுள்ளது.

6)                  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தொடர்ந்து தமிழகம் முன்னணி வகிக்கிறது.

7)                  டெலிகிராம் செயலியின் முதன்மைச் செயல் அதிகாரி பாவெல் துரோவ் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

1) New low pressure area is likely to form over Bay of Bengal on August 29, Meteorological Department said.

2) Toll gate charges increases in Tamil Nadu from September 1.

3) Tamil Nadu Chief Minister is going to America tomorrow to attract investments.

4) Health department informed that there is no monkey measles symptom in Tamil Nadu.

5) Prices of garlic and onion have started rising.

6) Tamil Nadu continues to lead in renewable energy sector.

7) Telegram CEO Pavel Durov was arrested in France.

Sunday 25 August 2024

NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு – மக்களின் புரட்சி – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு  – மக்களின் புரட்சி – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு – மக்களின் புரட்சி பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு – மக்கள் தொகையும் குடியிருப்புகளும் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு  – மக்கள் தொகையும் குடியிருப்புகளும் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு – மக்கள் தொகையும் குடியிருப்புகளும் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download