Sunday 31 January 2021

ஆடிட்டர் அக்கௌண்டன்ட் காலி பணியிடங்கள்

ஆடிட்டர் அக்கௌண்டன்ட் காலி பணியிடங்கள்

            மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தணிக்கை மற்றும் கணக்குத்துறை (C.A.G.) சார்பில் 6409 ஆடிட்டர் பணியிடங்கள், 4402 அக்கௌண்டன்ட் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநில வாரியான காலிப் பணியிடங்களைப் பொருத்த வரையில் தமிழகத்தில் 306 ஆடிட்டர் பணியிடங்களும், 288 அக்கௌண்டன்ட் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த பிற விவரங்கள் வருமாறு,

வயது வரம்பு

18 வயது முதல் 27 வயது வரை

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள்

19.02.2021

விண்ணப்பிக்கும் முறை

இணையத்தில் பதிவேற்றி விவரங்களை ஸ்பீடு போஸ்டில் அனுப்ப வேண்டும்.

விவரங்களை அனுப்பும் முகவரி

Sri V.S. Venkatanathan,

Asstt, C&AG (N),

O/o the C & AG of India,

9, Deen Dayal Upadhyay Marg,

New Delhi  – 110 124

மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ளை இணைப்பைச் சொடுக்கவும்.

https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06007f6e6e3dbd0-38877633.pdf

Saturday 30 January 2021

திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் பணிகள்

திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் பணிகள்

            கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு,

பணிகள்

Manager,

Executive,

Junior Executive,

Private Secretary,

Technicians உள்ளிட்ட 8 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பிக்க துவங்கும் நாள்

25.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

09.02.2021

மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://dindigulaavinrecruitment.com/#/landing

Friday 29 January 2021

விமானப் படையில் ஏர்மேன் பணி

விமானப் படையில் ஏர்மேன் பணி

            இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ், குரூப் ஒய் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ, டிப்ளமா படித்த திருமணமாகாதோர்.

வயது வரம்பு

ஜனவரி 16, 2001 லிருந்து

டிசம்பர் 19, 2004 க்குள் பிறந்தோர்.

விண்ணப்ப முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பிக்க கடைசி நாள்

பிப்ரவரி 7, 2021

மேலும் இப்பணியிடங்களுக்கான இன்ன பிற விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://airmenselection.cdac.in/CASB/

Thursday 28 January 2021

RBI இல் 322 ஆபிசர் பணியிடங்கள்

 

RBI இல் 322 ஆபிசர் பணியிடங்கள்

            இந்திய ரிசர்வ் வங்கியில் 322 ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Posts

Vacancies

B Grade Officers – General

270

B Grade Officers – DEPR

29

B Grade Offciers - DSIM

23

 

விண்ணப்பப் பதிவு முறை

ஆன்லைனில் மட்டும்

ஆன்லைன் பதிவு

துவங்கும் நாள்

28.01.2021

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள்

15.02.2021

தேர்வு நாள்

General Phase I & Paper I– March 6, 2021

Paper II & Paper III – March 31, 2021

General Phase II – April 1, 2021

 இன்ன பிற விவரங்களுக்கும், விண்ணப்பிப்பதற்கான வங்கியின் இணையதள முகவரிக்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3944

Wednesday 27 January 2021

TET Genuineness Form

TET Genuineness Form

            ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழுக்கான (TET Certificate) உண்மைத் தன்மைச் சான்றிதழ் (Genuineness) பெறுவதற்கான படிவத்தைப் (Form) பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

RBI இல் செக்யூரிட்டி கார்டு பணி

RBI இல் செக்யூரிட்டி கார்டு பணி

            இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அதன் பல்வேறு அலுவலகங்களுக்குத் தேவையான 241 செக்யூரிட்டி கார்டு பணிக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. தகுதி வாய்ந்த முன்னாள் ராணுவத்தினர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு முறை

ஆன்லைனில் மட்டும்

ஆன்லைன் பதிவு

துவங்கும் நாள்

22.01.2021

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள்

12.02.2021

ஆன்லைன் தேர்வு அட்டவணை வெளியாகும் நாள்

பிப்ரவரி / மார்ச், 2021

இன்ன பிற விவரங்களுக்கும், விண்ணப்பிப்பதற்கான வங்கியின் இணையதள முகவரிக்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3942

Tuesday 26 January 2021

National Institute of Design இல் படிக்க…

National Institute of Design இல் படிக்க…

            ஆந்திர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் உள்ள NID – National Institute of Design இல் B.Des., M.Des., மற்றும் Ph.D. படிக்க இணையவழி பிப்ரவரி 7, 2021 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://admissions.nid.edu/NIDA2021/Default.aspx

Tata Institute Invites Application for Ph.D. in Social Science

Tata Institute Invites Application for Ph.D. in Social Science

            Tata Institute of Social Sciences invites application for Ph.D. – 2021 at Mumbai Campus. Hyderabad and Tuljapur Off Campuses. (டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான சமூகவியல் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புக்காகத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மும்பை, ஹைதாராபாத், துல்ஜாபூரில் அமைந்துள்ள படிப்பு மையங்களில் ஆராய்ச்சி செய்ய விண்ணப்பிக்கலாம்)

            Areas of Specialization for Research (பின்வரும் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்)

Habitat Studies

Public Health

Health Services Management

Management and Labour Studies

Social Work

Applied Psychology

Library and Information Sciences

Education

Inclusive Development and Social Justice

Disaster Studies

Rural Development

Women’s Studies

Development Studies

For eligibility requirements, availability of seats in each programme and the online application form, please click the link below. (தகுதி விவரங்கள், ஆராய்ச்சிக்குரிய இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அறியவும் இணைய வழி விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்)

 https://tiss.edu/

தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளர் பணி


 தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

            தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 12 அலுவலக உதவியார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பத் தொடங்கும் நாள்

25.01.2021

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்

14.02.2021

 

மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tnrd.gov.in/

அகில இந்திய ஓவியப்போட்டியில் பரிசுகளை வெல்வீர்!

அகில இந்திய ஓவியப்போட்டியில் பரிசுகளை வெல்வீர்!

            பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிபொருள் செயல்திறன் குறித்த செய்தியை பரப்பும் நோக்கில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அகில இந்திய ஓவியப்போட்டியை நடத்துகிறது. சக்சாம் எனும் பிரச்சார திட்டத்தின் ஒரு பகுதியாf நடத்தப்படும் இவ்வோவியப் போட்டி ஜனவரி 18, 2021 முதல் பிப்ரவரி 10, 2021 வரை நடைபெறுகிறது. இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம்.

            இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் ஒரு பிரிவாகவும், 12 லிருந்து 21 வயதுக்குட்பட்டோர் ஒரு பிரிவாகவும், 21 வயதுக்கு மேற்பட்டோர் ஒரு பிரிவாகவும் கலந்து கொள்ளும் வகையில் மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

            மேலும் கூடுதல் தகவலைப் பெறவும் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://sakshampaintingcontest.com/

Sunday 24 January 2021

குடியரசு தின அழைப்பிதழ் தயாரிக்க …

குடியரசு தின அழைப்பிதழ் தயாரிக்க …

            26.01.2021 (செவ்வாய்) அன்று நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவுக்குப் பள்ளி சார்பாக Word / PDF இல் அழைப்பிதழ் தயாரிக்கலாம். Word இல் தயாரிக்க XXXX எனும் இடத்தைச் சொடுக்கி அதை Select செய்து Delete செய்து தங்கள் பள்ளிக்கேற்ப தேவையானதைத் தட்டச்சு செய்து இன்ன பிற தங்கள் பள்ளிக்கத் தேவையான மாற்றங்கள் இருப்பின் அதையும் செய்து கொண்டு அச்செடுத்துக் கொள்ளவும். PDF இல் தயாரிக்க அதை அச்சிட்டு கோடிட்ட இடங்களில் தேவையான விவரங்களை நிரப்பிக் கொள்ளவும். அச்செடுக்க A4 Size அளவுள்ள தாளைப் பயன்படுத்தவும்.

Word இல் அழைப்பிதழ் தயாரிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

PDF இல் அழைப்பிதழ் தயாரிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

வாக்காளர் தின உறுதிமொழி

வாக்காளர் தின உறுதிமொழி

            25.01.2021 அன்று தேசிய வாக்காளர் தினமாகும். இதையொட்டி வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க …

வாக்காளர் உறுதிமொழி

            மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.

•••••

வாக்காளர் தின உறுதிமொழியை PDF ஆகப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Friday 22 January 2021

CMAT விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

CMAT விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

            பிப்ரவரி 22 – 27 தேதிகளில் நடைபெற உள்ள சிமேட் தேர்வுக்கு டிசம்பர் 23, 2020 முதல் விண்ணப்பப்பதிவு நடைபெற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 22, 2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் ஜனவரி 30, 2021 வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதற்கான கட்டணம் செலுத்த கடைசி தேதியாக ஜனவரி 31, 2021 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

https://cmat.nta.nic.in/webinfo/File/GetFile?FileId=9&LangId=P

தேர்வு முகமையின் இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

https://cmat.nta.nic.in/