Ph.D. மாணவர்களுக்கான உதவித் தொகை
பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு தமிழக
அரசின் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு விண்ணப்பிப்பவர்கள்
2000 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பி.எச்.டி. படிப்பில் சேர்ந்தவர்களாகவும்
முழுநேர பி.எச்.டி. படிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டில் சேர்ந்தவர்களோ,
பகுதி நேர பி.எச்.டி. படிப்பவர்களோ இவ்வுதவித் தொகை பெற விண்ணப்பிக்க இயலாது. மேலும்
இவ்வுதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை மற்றும் எம்.பில். படிப்பில் 60% மதிப்பெண்கள்
பெற்றவர்களாக இருக்க வேண்டும். யு.ஜி.சி. அல்லது ஜே.ஆர்.எப். தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள்
இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பத்தில் ஆய்வு நெறியாளர்
மற்றும் கல்லூரி முதல்வரின் கையொப்பம் பெற்று கீழ்காணும் முகவரிக்கு 29.01.2021 க்குள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான முகவரி :
கல்லூரி
கல்வி இயக்குநர்,
ஈ.வெ.கி.
சம்பத் மாளிகை,
கல்லூரி
சாலை,
சென்னை
– 600 006
விண்ணப்பத்தைத்
தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment