Thursday 14 January 2021

உதவித்தொகையோடு உயர்படிப்பு படிக்க…

உதவித்தொகையோடு உயர்படிப்பு படிக்க…

            அடிப்படை அறிவியல் மற்றும் கணிதத் துறைகளில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மாதந்தோறும் ரூ. 35,000/- உதவித்தொகையோடு படிப்பதற்கு டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனம் உதவுகிறது. இந்நிறுவனத்தில் ஆராய்ச்சிப் படிப்பு (Ph.D.), முதுநிலைப் படிப்போடு ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்பு (Integrated Ph.D.) வாய்ப்புகள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் உள்ளன. இதற்கான ஆராய்ச்சிப் படிப்பு மையங்கள் மும்பை, பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ளன. டாடா ஆய்வு மையத்தில் உதவித்தொகையோடு படிப்பதற்கான நுழைவுத்தேர்வு மார்ச் 7, 2021 இல் நடைபெற இருக்கிறது. இந்நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4, 2021 லிருந்து ஜனவரி 31, 2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tifr.res.in/

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://univ.tifr.res.in/gs2021/Student_Login/Student_Login.htm

No comments:

Post a Comment