Thursday 21 January 2021

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க…

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க…

            வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்தும் எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்படி வழங்கப்படும் உதவித்தொகை விவரம் வருமாறு,

வ.எண்

கல்வித்தகுதி

உதவித்தொகை

1.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர்

ரூ. 200/-

2.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்

ரூ. 300/-

3.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / பெறாத மாற்றுத் திறனாளிகள்

ரூ. 600/-

4.

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்

ரூ. 400/-

5.

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள்

ரூ. 750/-

6.

பட்டதாரிகள்

ரூ. 600/-

7.

மாற்றுத்திறன் கொண்ட பட்டதாரிகள்

ரூ. 1000/-

இவ்வுதவித் தொகைக்கு விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை. மேலும் விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடித்தவராகவும், தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். உதவித்தொகையைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.  விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf

மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnvelaivaaippu.gov.in/downloads/Unemployment%20Assistance%20-%20Application%20Form%20for%20Differently%20Abled.pdf

சுய உறுதியளிப்புப் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnvelaivaaippu.gov.in/downloads/SELF_AFFIDAVIT.pdf

No comments:

Post a Comment