Thursday, 3 April 2025

எட்டாம் வகுப்பு இயல் – 9 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 9

திருப்புதல்

1) மனிதர்களின் இயல்புகளாகக் கன்னிப்பாவை கூறுவன யாவை?

1)  அன்பு

2)  அறிவு

3)  கருணை

4)  இரக்கம்

5)  பொறுமை

6)  ஊக்கம்

7)  ஆராய்ந்து தெளிதல்

ஆகியவற்றை மனிதர்களின் இயல்புகளாகக் கன்னிப்பாவை கூறுகின்றது.

 

2) தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

1)  உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் ஒருவர் மாறினால் தோல்வியும் தூண்டுகோலாகும்.

2)  தோல்வி தூண்டுகோலாகும் போது வெற்றி உருவாகி வாழ்வில் ஒளியேற்றும்.

 

3) அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

1)  மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர் அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.

2)  தம் ஆசிரியர் மீது கொண்ட அன்பினாலும் மதிப்பினாலும் தம் பெயரை அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார்.

 

4) இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

1)  1947 ஆகஸ்ட் 15 இல் நம் நாடு விடுதலை பெற்றது. அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2)  அம்பேத்கர் அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3)  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

4)  அம்பேத்கர் பல நாடுகளின் அரசியலமைப்புகளை நன்கு ஆராய்ந்து இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார்.

5)  அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு மிகச் சிறந்த சமூக ஆவணமாகப் போற்றப்படுகிறது.

 

5) பிறிது மொழிதல் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

1)  உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிது மொழிதல் அணியாகும்.

2)  (எ.கா)   கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

 

6) தான், தாம் என்பதன் வேறுபாடு யாது?

1)  தான் என்பது ஒருமையைக் குறிக்கும்.

2)  தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

*****

எட்டாம் வகுப்பு - இயல் – 8 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 8

திருப்புதல்

1) ஒன்றே குலம் – மனப்பாடப் பகுதி

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும் கதியில்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

 

2) குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

1)  இறைவன் மேலான பரம்பொருளாய் உள்ளத்தில் விளங்க வேண்டும்.

2)  தீய எண்ணங்களை அழித்து அறிவு ஒளியை வழங்க வேண்டும்.

3)  பணத்தின் மீதுள்ள ஆசையை அறுத்திட உதவிட வேண்டும்.

4)  உண்மை அறிவை இறைவன் உணர்த்திட வேண்டும்.

5)  ஐம்புலன்களை அடக்கி ஆளும் படிப்பைத் தர வேண்டும்.

 

3) அயோத்திதாசரின் ஐந்து பண்புகள் யாவை?

1)  நல்ல சிந்தனை

2)  சிறப்பான செயல்

3)  உயர்வான பேச்சு

4)  உவப்பான எழுத்து

5)  பாராட்டத்தக்க உழைப்பு

 

4) அரசியல் விடுதலை பற்றி அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

1)  அரசியல் விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று.

2)  அரசியல் விடுதலை என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகும்.

3)  சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது.

4)  சுயராஜ்ஜியம் என்பது மக்கள் வாழ்வில் சமூக பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.

5)  மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால்தான் நாடு முன்னேறும்.

 

5) பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பா நான்கு வகைப்படும். அவையாவன,

1)  வெண்பா

2)  ஆசிரியப்பா

3)  கலிப்பா

4)  வஞ்சிப்பா

 

6) நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் யாது?

1)  நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு.

2)  துன்பமே நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

*****

மூன்றாம் பருவ வினாத்தாள் கட்டணத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்

மூன்றாம் பருவ வினாத்தாள் கட்டணத்திற்கான

பயன்பாட்டுச் சான்றிதழ்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ வினாத்தாள் நகலெடுக்க வழங்கப்படும் தொகைக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் மாதிரியைக் கீழே காண்க.

Wednesday, 2 April 2025

தூய்மைப் பணியாளர் ஊதியப் பட்டுவாடா படிவம்

தூய்மைப் பணியாளர் ஊதியப் பட்டுவாடா படிவம்

பள்ளியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளருக்கான ஊதிய பட்டுவாடா படிவத்தின் மாதிரியைக் கீழே காண்க.


எட்டாம் வகுப்பு - இயல் – 7 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 7

திருப்புதல்

1) கலிங்கத்துப் பரணி – மனப்பாடப் பகுதி

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி

            மறைவர் சிலர் வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

            இருவர் ஒருவழி போகல் இன்றியே

 

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்

            உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா இறைஞ்சினர்

            அபயம் அபயம் எனநடுங்கியே.

 

2) பகத்சிங் கண்ட கனவு யாது?

1)  சதி வழக்கில் பகத்சிங் கைது செய்யப்பட்டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார்.

2)  தூக்குத் தண்டனை கைதியாய்ப் பகத்சிங் இருந்த போதும் இந்திய சுதந்திரத்தைக் கனவு கண்டார்.

 

3) எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் ஈடுபடக் காரணம் யாது?

1)  எம்.ஜி.ஆர் இளமைக் காலத்தில் வறுமையின் கொடுமையில் வாடினார்.

2)  வறுமையின் காரணமாகவே எம்.ஜி.ஆர் நாடகத்துறையில் ஈடுபட்டார்.

 

4) தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர் ஆற்றிய பணிகள் யாவை?

1)  எம்.ஜி.ஆர் அவர்கள் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார்.

2)  மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.

3)  தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கழகத்தைத் தோற்றுவித்தார்.

 

5) சந்திப்பிழை என்றால் என்ன?

1)  வல்லினம் மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவதும், மிகாத இடங்களில் மிகும்படி எழுதுவதும் சந்திப்பிழை ஆகும்.

2)  சந்திப்பிழையை ஒற்றுப்பிழை எனவும் கூறுவர்.

 

6) வல்லினம் மிகும் இடங்கள் ஐந்தினைக் கூறுக.

1)  சுட்டுத்திரிபு

2)  வினாத்திரிபு

3)  உவமைத்தொகை

4)  உருவகம்

5)  திசைப்பெயர்கள்

 

7) அறிவுசால் ஔவையார் எனும் நாடகத்தைச் சுருக்கி எழுதுக.

            ஔவையார் அதியமான் அவையில் நெடுங்காலம் தங்கியிருந்தார். அதியமான் ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்தான். அதியமானின் தமிழ்ப் பற்றைக் கண்டு ஔவையார் உள்ளம் நெகிழ்ந்தார்.

            அதியமானின் பக்கத்து நாட்டு அரசன் தொண்டைமான் ஆவான். அவன் அதியமான் நாட்டின் மீது போர் தொடுக்க எண்ணினான். இத்தகவலை அறிந்த அதியமான் போரினால் ஏற்படும் இழப்புகள் குறித்து கவலை அடைந்தான்.

            அதியமானின் மனக்கவலையை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் தூது செல்ல முடிவெடுத்தார்.

            தூது வந்த ஔவையாரைத் தொண்டைமான் வரவேற்றான். தனது படைக்கலக் கொட்டிலை ஔவையாருக்குத் தொண்டைமான் காட்டினான். அதைக் கண்ட ஔவையார் படைக்கலன்கள் புதிதாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அதியமானின் படைக்கலன்கள் குருதி படிந்து, போரில் ஏற்பட்ட பழுதுகளோடு இருப்பதையும் ஔவையார் குறிப்பிட்டார்.

            ஔவையார் சுட்டிக் காட்டியதன் உட்பொருளை உணர்ந்த தொண்டைமான் போரிடப்  போவதில்லை என்று முடிவெடுத்தான். இவ்வண்ணம் ஔவையார்  தனது அறிவாற்றலால் போரைத் தடுத்துச் சமாதானத்தை உருவாக்கினார்.

*****

 

எட்டாம் வகுப்பு - இயல் – 6 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 6

திருப்புதல்

1) உழவுத்தொழில் குறித்து தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

1)  சேர மன்னரின் நாட்டில் வருவாய் சிறந்து விளங்குகின்றது.

2)  வயலில் விதைத்த விதைகள் நன்றாக முளை விடுகின்றன.

3)  பயிர்கள் நன்கு வளர குறைவின்றி மழை பொழிகின்றது.

4)  பயிர்கள் நன்கு செழித்து வளர்கின்றன.

5)  பயிர்களில் கதிர் முற்றி நன்முறையில் அறுவடை நடைபெறுகின்றது.

6)  நன்முறையில் விளைந்த விளைச்சலால் உழவர்களின் வாழ்வு செழிக்கின்றது.

7)  உழவர்களின் ஆரவார ஒலியால் நாரைகள் அஞ்சி நடுங்குகின்றன.

 

2) தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

1)  தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல் ஆகும்.

2)  திண்டுக்கல் மலர் உற்பத்தியில் தமிழ்நாட்டில் முதலிடம் வகிப்பதால், அது தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுகிறது.

 

3) கரூர் மாவட்டம் குறித்த செய்திகளை விரிவாக எழுதுக.

1)  கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும்.

2)  முற்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கிய வஞ்சி மாநகரம் கரூர் ஆகும்.

3)  கிரேக்க அறிஞர் தாலமி கரூரை முதன்மையான வணிக மையமாகக் குறிப்பிடுகிறார்.

4)  கரூர் மாவட்டத்தில் நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை பயிரிடப்படுகின்றன.

5)  கரூர் மாவட்டத்தில் கல்குவாரித் தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றன.

6)  கைத்தறி ஆடைகளுக்கும் கரூர் மாவட்டம் பெயர் பெற்றது.

7)  பேருந்து கட்டுமானத் தொழிலும் கரூர் மாவட்டத்தில் சிறந்து விளங்குகிறது.

 

4) இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்கு.

1)  நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமுமின்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

2)  எடுத்துக்காட்டு : தாய் + மொழி = தாய்மொழி

 

5) மரபுத்தொடர்கள் சிலவற்றைக் கூறுக.

1)  கொடிகட்டிப் பறத்தல் – புகழ் பெற்று விளங்குதல். (எ.கா) திண்டுக்கல் பூட்டுகள் தயாரிப்பில் கொடி கட்டிப் பறக்கும் நகரமாக உள்ளது.

2)  அவசரக் குடுக்கை – எண்ணிச் செயல்படாமை. (எ.கா) பெரியோர்கள் முன்னிலையில் அவசரக் குடுக்கையாகச் செயல்படக் கூடாது.

*****

Tuesday, 1 April 2025

எட்டாம் வகுப்பு - இயல் – 5 திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 5

திருப்புதல்

1) பாடறிந்து ஒழுகுதல் – மனப்பாடப் பகுதி

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.

 

2) திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வர்ணிக்கிறார்?

1)  திருக்கேதாரத்தில் இனிய தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றன.

2)  பாடல்களுக்கு இனிமை சேர்க்கும் விதமாகப் புல்லாங்குழலும் மத்தளமும் இசைக்கப்படுகின்றன.

3)  பொன்வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்துளிகளை வாரி இறைக்கின்றன.

4)  யானைகள் மணிகளை வாரி இறைக்கின்றன.

5)  கிண் எனும் இசை திருக்கேதாரத்தில் முழங்குகின்றது.

 

3) பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை?

1)  கிலுகிலுப்பை

2)  பொம்மைகள்

3)  சிறிய கொட்டான்கள்

4)  பெரிய கூடை

5)  சுளகு

6)  விசிறி

7)  தொப்பி

8)  ஓலைப்பாய்

 

4) பிரம்பினால் பொருள் செய்யும் முறையைக் கூறுக.

1)  முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.

2)  சூடான பிரம்பை தேவையான வடிவத்திற்கேற்ப வளைக்க வேண்டும்.

3)  பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்து விட வேண்டும்.

4)  பிறகு இழைகளால் கட்டியும் சிறு ஆணிகளால் தைத்தும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.

 

 

5) தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவையாவன,

1)  வேற்றுமைத் தொகை

2)  வினைத்தொகை

3)  பண்புத்தொகை

4)  உவமைத்தொகை

5)  உம்மைத்தொகை

6)  அன்மொழித்தொகை

 

6) சிறந்த ஆட்சியின் பண்புகளாகத் திருக்குறள் கூறுவது யாது?

1)  நன்கு ஆராய்தல்,

2)  நடுவுநிலையில் நிற்றல்

ஆகியன சிறந்த ஆட்சியின் பண்புகளாகும்.

*****